‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

கௌதம் கார்த்திக்-சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் ஐபி கார்த்திகேயனுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸின் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. மேலும் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முன்னதாக திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் முடித்துள்ளனர்.

பர்சா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் கூறும்போது, “முன்பே திட்டமிட்டபடி எங்கள் படக்குழு சரியான நேரத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் தனது முதல் அறிமுகப் படத்திலேயே பெரிய நட்சத்திரங்களையும் படக்குழுவையும் அற்புதமாகக் கையாண்டிருப்பதில் அவரது திறமையை நான் பாராட்டுகிறேன். கெளதம் கார்த்திக் மற்றும் சரத் குமார் ஆகியோர் இந்தப் படம் சிறப்பாக வர வேண்டும் என்று தங்கள் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுத்ததற்கு நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “’கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். படப்பிடிப்பைப் பொருத்தவரை சரியான திட்டமிடல் மற்றும் சரியாக அதை செய்து முடிப்பது எப்போதும் தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயம். ஒட்டுமொத்த படக்குழுவின் முழுமையான அர்ப்பணிப்பைக் கண்டு மீனாட்சி சுந்தரம் சாரும் நானும் மகிழ்ச்சியடைகிறோம். படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்”.

படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, பாடல்களை சினேகன் எழுதி இருக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவைக் கையாள, படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.