ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ டீசர் வெளியாகியுள்ளது
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவலாக வெளியாக இருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர் நாக சைதன்யா, தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படம் மூலம் அறிமுகமாகிறார். தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக படத்தின் தமிழ் பதிப்பில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் கொடுத்துள்ளார். ஆக்ஷன் பேக்ட் படமாக உருவாகி இருக்கும் இதன் டீசரிலும் இவரது குரல் வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடியத் திரைப்படமாக இது அமைந்திருக்கிறது. படத்தின் டேக் லைனாக அமைந்துள்ள ‘A Venkat Prabhu Hunt’, இயக்குநர் வெங்கட்பிரபுவின் ரசிகர்களிடையேயும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ‘கஸ்டடி’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதை பார்த்தாக வேண்டும் என்ற பட்டியலில் ரசிகர்கள் இதை வைத்துள்ளனர். இயக்குநர் வெங்கட்பிரபு பல்வேறு ஜானர்களில் இதற்கு முன்பு வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த முறை ‘ஆக்ஷன் எண்டர்டெயினர்’ என்ற ஜானரில் தன் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளார்.
’கஸ்டடி’ படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அப்பா-மகன் ஒரே படத்தில் இசைக்காக இணைந்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா மற்றும் யங் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்காக இசையமைத்து இருக்கிறார்கள். இந்தப் படத்தின் பின்னணி இசை தரக்கூடிய அனுபவத்தைத் திரையரங்குகளில் தவறவிடாதீர்கள்.
வெளியாகியுள்ள டீசரில் நாக சைதன்யா, அரவிந்த் சுவாமி மற்றும் சரத் குமாருக்கும் இடையிலான கேட் அண்ட் மவுஸ் கேம் பற்றிய விஷயங்கள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால் ரசிகர்களை கவரக்கூடிய நடிகர் அரவிந்த் சுவாமி இந்தப் படத்திலும் தன் ரசிகர்கள் விரும்பக்கூடிய சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.
‘கஸ்டடி’ திரைப்படம் உலகம் முழுவதும் மே 12 அன்று திரையரங்குகளில் தமிழ் & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. நாக சைதன்யாவின் சினிமா பயணத்தில் அதிக அளவிலான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள்:
நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத் குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட் பிரபு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்: பவன் குமார்,
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா,
ஒளிப்பதிவாளர்: எஸ்.ஆர்.கதிர்,
படத்தொகுப்பு: வெங்கட் ராஜன்,
தமிழ் வசனம்: வெங்கட்பிரபு,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்
சண்டைப்பயிற்சி: ஸ்டண்ட் சிவா, மகேஷ் மேத்யூ
கலை இயக்குநர்: டிஒய் சத்யநாராயணா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்