கைதி கே எஸ் ரவிக்குமாரை தப்பிக்க விட்டதற்காககாவல்துறை அதிகாரியான காஜல் அகர்வால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதற்கு முன் என்ன நடந்தது என்பதை விவரிக்கும் ஃப்ளாஷ் பேக் கதையாக படம் நகர்கிறது.இதில் சினிமாவில் உதவி இயக்குனர்களாக இருக்கும் யோகி பாபு, டேனியல் போப், ஜெகன் ஆகியோர் காஜல் அகர்வாலை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என பின்தொடர்கின்றனர். இடையில் கே.எஸ் ரவிக்குமாரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காஜல் அகர்வால், அப்பாவி இளைஞன் ஜெய்யை சுட்டுக் கொன்று விட்டதாக நம்புகிறார். அதன்பின் அவரது வீட்டில் தொடர்ந்து அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கின்றன. அதற்கு காரணம் ஜெய்தான் என்பதும் தெரிய வருகிறது.ஆனால் அவரது மரணத்திற்கு தான் காரணம் அல்ல என்பதும் காஜல் அகர்வாலுக்கு தெரிய வர, ஒரு கட்டத்தில் கே எஸ் ரவிக்குமாரை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். காஜலால் அவரை பிடிக்க முடிந்ததா, மீண்டும் பணியில் சேர முடிந்ததா என்பது மீதிக்கதை. காமெடி போலீசாக நடிக்க வேண்டும் என்றால் கூப்பிடு காஜல் அகர்வாலை என்று சொல்வதற்கு ஏற்ற மாதிரி ஜில்லா படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் படம் முழுக்க நகைச்சுவை இழையோடும் நடிப்பை கொடுத்திருக்கிறார் காஜல் அகர்வால். இவருடன் கூடவே கூட்டாளி போலீசாராக ஊர்வசியும் சத்யனும் சேர்ந்து கொண்டு படம் முழுவதும் அதகளப்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் பைத்தியக்கார மருத்துவமனை வார்டனாக வரும் மொட்ட ராஜேந்திரனும் சீரியஸ் கலந்த காமெடியில் பிய்த்து உதறி இருக்கிறார். இன்னொரு பக்கம் யோகி பாபு கூட்டணியினர் சினிமா எடுக்கிறேன் என காஜல் அகர்வாலை துரத்தும் காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும் நினைத்து ரசிக்கும் அளவிற்கு காமெடி காட்சிகளாக அமையவில்லை என்பது சற்று வருத்தம் தான்.அவர்களும் பேய்களாக மாறி அடிக்கும் லூட்டிகளும் ரசிக்க வைக்கின்றன.
Home *கோஷ்டி ; விமர்சனம்*