HomeNewsஜீவி திரைப்படம் பற்றி நடிகர் கருணாகரன்

ஜீவி திரைப்படம் பற்றி நடிகர் கருணாகரன்

ஜீவி திரைப்படம் பற்றி நடிகர் கருணாகரன் 


நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு தன்னை மிக எளிதாக மாற்றிக் கொண்டு நடிப்பது தான் நடிகர் கருணாகரனை தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக வைத்திருக்கிறது. சிறந்த மற்றும் வித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க பெரும் முயற்சிகளை எடுப்பதால், கருணாகரன் நகைச்சுவை கலைஞராக மட்டுமல்லாமல், ஒரு கதாபாத்திர கலைஞராகவும் மக்களுக்கு மிகவும் பிடித்தவராக மாறியிருக்கிறார்.“ஜீவி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கருணாகரன், இந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

கருணாகரன் கூறும்போது, “களவு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் தான், இந்த ஸ்கிரிப்டை கேட்கும்படி எனக்கு பரிந்துரைத்தார். கதையை கேட்டபோது, அதில் நிறைய புதிய கூறுகளை கண்டு மிகவும் வியந்தேன். இது ஒரு வித்தியாசமான மற்றும் தனித்துவமான படம் என்று நான் சொன்னால் அது வழக்கமான அறிக்கையாக இருக்கும். ஆனால் இது நியாயமான ஒரு கதையை கொண்டுள்ளது, இது போன்ற கதை வருவது முதன் முறை என்று தோன்றியது. மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என்னவென்றால், படம் ஒரு சிக்கலான கருத்தியலை கொண்டிருந்த போதிலும், எளிமையான விவரிப்புடன் அழகாக, அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. கதை எனக்கு விவரிக்கப்பட்டபோது, முக்கிய பின்னணியாக விளங்கும் ‘மனித இணைப்பு’ என்ற கருத்து என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. மேலும் கதையை திரைக்கு உருமாற்றும் செயல்முறையை நான் முழுமையாக அனுபவித்தேன்” என்றார்.

நடிகர் கருணாகரன் தனது நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம், தற்போது பல திரைப்படங்களின் ஒரு சிறந்த சொத்தாக மாறிவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. “ஜீவி” படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது ஒரு சிக்கலான மற்றும் தீவிரமான படமாக தெரிகிறது, இந்த படத்தில் எப்படி நகைச்சுவையை நாம் எதிர்பார்க்க முடியும்? என்று கேட்டதற்கு, அவர் கூறும்போது, “ஜீவி சில ஆச்சரியமான கூறுகளைக் கொண்ட ஒரு திரில்லர் திரைப்படம். சூழலுக்கு ஏற்ப, வரம்புகளுக்கு உட்பட்டு, சில நகைச்சுவையை கொண்டுள்ளது. இயற்கையாகவே, பார்வையாளர்கள் தனித்துவமான திரைப்படங்களை தேடத் தொடங்கியுள்ளனர். அதனால் ஒரு படத்திலிருந்து மற்றொன்றை வித்தியாசமாக வழங்க நாங்கள் வலியுறுத்தப்படுகிறோம்” என்றார்.

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன், வி சுடலைக்கண் வெள்ளபாண்டியன், சுப்ரமணியம் வெள்ளபாண்டியன்  தயாரித்திருக்கும் இந்த படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருக்கிறார். பாபு தமிழ் கதாசிரியராக பணி புரிந்திருக்கிறார். வெற்றி, மோனிகா சின்னகோட்ளா, அஷ்வின் சந்திரசேகர், ரோகிணி, கருணாகரன், ரமா, மைம் கோபி, தங்கதுரை மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்க, பிரவீன் குமார் ஒளிப்பவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img