spot_img
HomeNewsராஜேஷ் வைத்யா '60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகள்' வாசித்து புதிய ‘ஆசியா புக் ஆப்...

ராஜேஷ் வைத்யா ’60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகள்’ வாசித்து புதிய ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’

வீணை மேஸ்ட்ரோ கலைமாமணி ராஜேஷ் வைத்யா ’60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகள்’ வாசித்து புதிய ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை

வீணை மேஸ்ட்ரோ கலைமாமணி ராஜேஷ் வைத்யா, தனது குழுவினருடன் 60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகளை வசித்து, ஆசிய அளவில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறார். இன்று ஹோட்டல் சவேராவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ எனும் இத்தளம், ஆசிய நாடுகளின் தேசிய சாதனையாளர்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும், ‘ஆசிய சாதனையாளராக’ ஆக்கும் முயற்சியில் உருவானது.  இத்தளம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வியட்நாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இண்டோ-சீனா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லாவோஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், மற்றும் நேபால் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய தளங்களின் தேசிய சாதனையாளர்கள், தங்களை ஒப்பிட்டு, போட்டியிட்டு, ‘ஆசிய சாதனையாளர்’ அந்தஸ்துக்கு தங்களை உயர்த்தி கொள்வதற்கு ஒரு நல்ல அடித்தளமாக அமைந்திருக்கிறது. இத்தளம் சுமார் 40,000 சாதனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனம், சாதனைகளை பதிவு செய்வதற்கு சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கலைமாமணி ராஜேஷ் வைத்யா வென்றுள்ள பட்டம் ‘ஒரு மணி நேரத்தில் அதிக பாடல் துணுக்குகளை வீணையில் வாசித்தவர்’ என்பதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img