spot_img
HomeNewsஅகில இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் 58 ஆவது மாநாட்டிற்கான பிரத்யேக இணையதளம் தொடக்கம்

அகில இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் 58 ஆவது மாநாட்டிற்கான பிரத்யேக இணையதளம் தொடக்கம்

அகில இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் 58 ஆவது ஆண்டு மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான பிரத்யேக இணையதளத்தின் தொடக்கவிழா இன்று சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.


இவ்விழாவில் அகில இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் செயல் தலைவர் டாக்டர் சஞ்சீவ் கே ஜா, பொதுசெயலாளர் டாக்டர் கே என் அண்ணாமலை, அகில இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் பி முருகன், செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராஜன் சாமுவேல், இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி எஸ் தேசிகாமணி ,மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலாளர் டாக்டர் எம் எஸ் சதீஷ் ,மாநாட்டின் பொருளாளர் டாக்டர் கே எஸ் ஐ முரளி சங்கர் உள்ளிட்ட ஏராளமான சங்க நிர்வாகிகள், இயன்முறை மருத்துவர்கள்,தனியார் மருத்துவ கல்லூரியின் முதல்வர்கள், பிரதிநிதிகள்,பேராசிரியர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

விழாவில் WWW.IAPCON2020CHENNAI.COM என்ற 58 ஆவது மாநாட்டிற்கான பிரத்யேக இணையதளத்தை தலைவர் சஞ்சீவ் கே.ஜா தொடங்கி வைத்தார்.

இந்த மாநாடு சென்னையில்2020 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 6 7 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சென்னையின் புறநகர்பகுதியான கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள Confluence Resort & Convention Centre இல் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

அகில இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் சஞ்சீவ் கே ஜா பேசுகையில்.“ இந்த ஆண்டிற்கான மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. சங்கத்தின் அடுத்த மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் சங்கத்தின் உறுப்பினர்களும், அகில இந்திய அளவிலான அனைத்து இயன்முறை மருத்துவர்களும், சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த மாநாட்டில் இந்தியாவை தவிர அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்து ஏராளமான இயன்முறை மருத்துவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்த மாநாட்டில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு தொடர்பான விரிவான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு குழுவினர் சிறப்பாக திட்டமிட்டு செய்து வருகிறார்கள். இதற்காக தொடங்கப்பட்டிருக்கும் இந்த இணையதளத்தில் சங்க உறுப்பினர்களும், சங்கத்தில் உறுப்பினர் அல்லாத இயன்முறை மருத்துவர் களும், தங்களது வருகையை பதிவுசெய்து கொண்டு, மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.

மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பயிற்சி பட்டறை, கருத்தரங்கம், ஆய்வரங்கம் என தொழில்முறையிலான நவீன உத்திகள் குறித்து சர்வதேச மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்த மாநாட்டில் பெண் மருத்துவர்களுக்கான பிரத்தியேக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களின் திறமையையும், தொழில் நுட்பங்களையும் விவரிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் ஏற்ற களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஒரு காலகட்டத்தில் இயன்முறை மருத்துவர்கள் அனைவரும் நோயாளிகளை தேடி அவர்களது வீட்டுக்கு சென்று மருத்துவ சேவையைமேற்கொண்டார்கள். இன்று இயன்முறை மருத்துவர்களை தேடி, நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.இன்றைய இந்த நிலைக்கு இயன்முறை மருத்துவர்களின் தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதலாம்.

இயன்முறை மருத்துவர்கள் தங்களது தொழில் சார்ந்த பணிகளுக்கு எந்தவித தடைகளும், இடையூறுகளும் ஏற்படாத வண்ணம், பணி பாதுகாப்பு வழங்கும் வழங்க வகை செய்யும் புதிய சட்ட மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்வதற்கான ஆலோசனைகளை, பாராளுமன்ற நிலைக்குழு விடம் நம்முடைய அகில இந்திய சங்கம் தெரிவித்திருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ்நாடு இயன்முறை மருத்துவர் சங்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளும், அதுகுறித்த வேண்டுகோள்களை அகில இந்திய சங்கம் சார்பாக தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

பின்னர் இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு தங்களின் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இறுதியாக அகில இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் 58ஆவது மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் பி எஸ் தேசிகாமணி நன்றி தெரிவித்தார்.

இந்தியா முழுவதுமுள்ள பஸியோதெரபி மருத்துவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது குறித்த அனைத்து விசயங்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றிருக்கிறது.இந்த இணையதளத்தின் மூலம் தங்களது வருகையை பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று அகில இந்திய பிஸிகோதெரபிஸ்ட் அஸோஸியேசன் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img