” தாமதமாக வழங்கப்பட்ட நீதியும்”
அநீதிக்கு சமானம்
”கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை தலைவிரித்து ஆடுதுன்னு சொல்லுவாங்க”
”சட்டம் சாமான்யர்களுக்கு எட்டாத தூரம்”
இதுபோல் ஆயிரம் உதாரணம் சொல்லலாம் தோழர் வெங்கடேசனை படத்தைப் பற்றி சரி கதைக்கு வருவோம்
தாய் தகப்பன் இல்லாத அனாதை வெங்கடேசன் சொந்தமாக சோடா கம்பெனி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார் தன்னைப் போல் அனாதையான பெண்ணை தன்னுடன் வைத்து பாதுகாத்து வரும் நிலையில் விபத்தில் இரு கைகளை இழக்கிறான்
விபத்து ஏற்படுத்தியது அரசாங்க பஸ் என்பதால் தனக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றத்தை நாட நீதி மன்றம் அவனுக்கு நீதி நிதியை பெற்றுத் தந்ததா வெள்ளித்திரையில் காணுங்கள்
நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டுக்கு செல்லும் நாயகன் வாய்தா வாய்தா வாய்தா என்று வாய்தா வாங்கும் அரசு தரப்பு வக்கீல் மூன்று வருடங்களுக்கு பிறகு நீதிமன்றம் நஷ்ட ஈடு வழங்க சொல்லியும் நஷ்ட ஈடு வழங்காமல் காலம் தாழ்த்தும் பஸ் நிறுவனமும்
நஷ்டஈடு வழங்கும் வரை அரசு பஸ் ஜப்தி செய்து நாயகன் பாதுகாப்பில் வைக்க அந்த பஸ்சை பாதுகாக்க நாயகன் படும் பாடு’‘ இந்திய பாகிஸ்தான் எல்லையை’‘ நம் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பதை விட கஷ்டமானது என எண்ணிய நாயகன்
பஸ்சை கோர்ட்டில் ஒப்படைக்க செல்லும்போது நடக்கும் விஷயம் பார்க்கும் நம் அனைவரையும் கண்கலங்க வைக்கும்
தன் முதல் படத்திலேயே இரு கைகள் இல்லாமல் ஒரு சராசரி மனிதனாக அருமையாக நடித்திருக்கிறார் இழப்பீடு வாங்குவதற்காக அவர் படும்பாடு கண்களாலேயே நடிப்பை காட்டி ஒரு தேர்ச்சி பெற்ற நடிகன் போல் நம் கண் முன் தோன்றுகிறார்
நாயகி மோனிகா கண்களால் சோகத்தை தேக்கி வைத்திருக்கும் கதாபாத்திரம் வசனம் குறைவாக இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்
படத்தின் தலைப்பில் தோழர் என்பதை பார்த்தவுடன் இப்படத்தில் கம்யூனிச சித்தாந்தம் கண்டிப்பாக இருக்கும் நீங்கள் நினைத்தால் அது உண்மை ஆனால் அந்த சித்தாந்தம் ஒலிபெருக்கி யாக ஓல மிடாமல் தெளிந்த நீரோடையாக தெளிவாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்
எதார்த்தங்களை எள்ளளவும் மிகாமல் எளிய வண்ணம் வசனங்களை வார்த்தைகளாக வடிவமைத்திருக்கிறார்” அரசியலும் பேசியிருக்கிறார் ” ”மாந்திரீகத்தை யும்” மை தடவி பார்த்து இருக்கிறார்
பாலியல் வன்கொடுமையும் சொல்லியிருக்கிறார் பாசமான காதலையும் காட்டியிருக்கிறார்
தோழர் வெங்கடேசன் சமுதாயத்தின் சாடல்