spot_img
HomeCinema Reviewகூர்கா விமர்சனம்

கூர்கா விமர்சனம்

யோகி பாபு நாயகனாக நடிக்க சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் கூர்க்கா

கூர்க்கா இனத்தை சேர்ந்த யோகிபாபு க்கு போலீசில் சேர வேண்டும் ஆசை போலீஸ் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர் வேறு வழி இல்லாமல் மனோபாலா நடத்தும் செக்யூரிட்டி சர்வீஸ் வேலைக்கு செல்கிறார்

அங்கு அவருக்கு அமெரிக்கத் தூதராக வரும் எலிசாவின் நட்பு கிடைக்கிறது ஒருதலைபட்சமாக அவரை காதலிக்கிறார் ஒரு கட்டத்தில் ஷாப்பிங் மாலுக்கு செக்யூரிட்டியாக செல்லும் யோகி பாபு அங்கு வேலை செய்யும் செக்யூரிட்டி சார்லி நட்பு கிடைக்கிறது

அப்போது தீடீரென ஒருநாள்    மக்களின் அல்ப ஆசையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கடத்தல் கும்பல் படம் பார்க்க இலவச டிக்கெட்டும் ரூபாய் 5000 க்கு இலவச ஷாப்பிங்கும் என மெசேஜ் அனுப்ப இலவசத்துக்கு ஆசைப்படும் கும்பலை வரவழைத்து    பிணையக் கைதியாக வைத்துக்கொண்டு தீவிரவாத கும்பல் ஷாப்பிங் மால் ஒன்றினை கைப்பற்றி விடுகின்றனர். அதற்குள் கதாநாயகியும் சிக்கி கொள்கிறார்.

அது யோகிபாபுவுக்கு தெரியவர அதிலிருந்து கதாநாயகியை மீட்க அவர் செய்யும் சாகசங்கள் மற்றும் தில்லு முள்ளு இறுதியில் கதாநாயகியை காப்பாற்றினாரா? அவர்கள் என் கதாநாயகியை பிடிக்க வந்தனர் என்பதே படத்தின் மீதி கதை.

அழகான உருவமும் துள்ளலான நடனமும் துடிப்பான சண்டையும் என தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் நாயகர்கள் மத்தியில் இதில் எந்த தகுதியும் இல்லாத யோகிபாபு கூர்க்கா திரைப்படத்தில் நகைச்சுவை எனும் கதை களத்தில் கலக்கு கலக்கு என்று கலக்கி இருக்கிறார்

வெள்ளைக்காரி எலிசா வுடன் ஜிவி பிரகாஷின் பின்னணி குரலில் கும்மாளமும் போட்டிருக்கிறார்

யோகி பாபு விஜய்; விஷால்; அஜித்; தனுஷ் ;என அனைத்து அனைத்து நடிகர்களையும் இமிடேஷன் செய்து நக்கலுடன்  நம்மை சிரிக்க வைக்கிறார்

கடத்தல்காரன் இடம் வாக்கி டாக்கியில் யோகிபாபு மிரட்டுவது சிரிப்புக்கு சிகரம் வைத்தது போல்

bomb squad ஆனந்தராஜ் உடன் யோகி பாபு அடிக்கும் லூட்டி காமெடியின் பியூட்டி 

இவர் ஒரு புறம் என்றால் கடத்தல் கும்பலில் சிக்கியிருக்கும் அரசியல்வாதி மயில்சாமி மற்றும் ஆன்மிகவாதி  தொலைக்காட்சி நிறுவனர் என பலரும் அவரவர் பங்குக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார்

மற்றும் ஆடுகளம் நரேன் ரவி மரியா இவர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து இருந்தாலும் ரவி மரியா நடிப்பு டப்பிங் பேமெண்ட் க்கும் நடித்திருக்கிறார் அவர் கத்தும் கத்தல் இரைச்சல் மட்டுமல்ல எரிச்சலையும் கூட்டுகிறது

இயக்குனர் சாம் ஆண்டன் காமெடி கதைக்களத்திற்கு தொய்வில்லாத திரைக்கதை அமைத்து சிரிப்பான வசனங்களை சிலேடையாக தூவி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்

கூர்க்கா     இவன் தயாரிப்பாளரின் காவலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img