spot_img
HomeNews1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை                                           “ பூவே போகாதே “

1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை                                           “ பூவே போகாதே “

கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் “சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “ பூவே போகாதே “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  – ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா

இசை  –  சபு வர்கீஸ்

பாடல்கள்  –  விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர்

எடிட்டிங்   –  ஜே.பி

நடனம்  –  நரேஷ் ஆனந்த்

ஸ்டன்ட்  –  ராம் சுங்கரா, நபா சுப்பு.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

இது 1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் இது.  முழுக்க முழுக்க நாயகன், நாயகியை சுற்றி நடக்கும் திரைக்கதை இது.கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள்.

அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படி பார்த்தது என்பதை அழுத்தமாக பதிவிடுள்ளோம்.

தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img