spot_img
HomeNews“தீர்ப்புகள் விற்கப்படும்” 

“தீர்ப்புகள் விற்கப்படும்” 


‘கதை தான் எப்போதுமே ஹீரோ’ என்ற கோட்பாடு காலப்போக்கில், சில சுவாரஸ்யமான கருவை கொண்ட படங்கள் மூலம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களுடன் பலமுறை வலுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் நடித்துள்ள “தீர்ப்புகள் விற்கப்படும்” படம் பல்வேறு நல்ல காரணங்களுக்காக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முதன் முறையாக ரெட் மான்ஸ்ட்ரோ 8K கேமராவைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ள திரைப்படமான இதில் சத்யராஜின் மனதைக் கவரும் நடிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஒருபோதும் அதன் மீது கவனத்தைத் திருப்பத் தவறவேயில்லை. சத்யராஜ் சில அதிரடி காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சிறப்பாக முடித்ததில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இது குறித்து படத்தின் இயக்குனர் தீரன் கூறும்போது, “சத்யராஜ் சார் படத்தை அலங்கரித்த விதம் பற்றி நான் தொடர்ந்து பேசி வருவதால் பார்ப்பவர்களுக்கு இது ஒரு தொடர்ச்சியான அறிக்கையாக தோன்றும் என்று நினைக்கிறேன். இது முற்றிலும் உண்மை, ஏனென்றால் அவர் தனது மாயாஜால எனர்ஜியால் எங்களை அடிக்கடி ஆச்சரியப்படுத்தியுள்ளார். தினேஷ் சுப்பராயன் தனது பாணியில் சில கடினமான சண்டைக்காட்சிகளை வடிவமைத்தார், சத்யராஜ் சாரால் அதை நிறைவேற்ற முடியுமா என்று எங்களுக்கு ஆரம்பத்தில் சந்தேகம் ஏற்பட்டது. ஆயினும் கூட, அவர் சண்டைக் காட்சிகளில் தனது அதிரடியால் எங்கள் நம்பிக்கையின்மையை அப்பட்டமாக அடித்து நொறுக்கினார். பாதகமான காலநிலை நம்மை விரைவிலேயே சோர்வுக்கு உள்ளாக்கி விடும், ஆனால் அவர் ஒரு இடைவிடாத ஆற்றலை கொடுத்து எங்களை ஆச்சர்யப்படுத்தினார். இது வெறுமனே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல, நம் உடலை கட்டுக்கோப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க நாமும் வழக்கமான பயிற்சிகளைப் பெற வேண்டும் என்ற முடிவுக்கு எங்களை இட்டுச் சென்றது” என்றார்.

அதிக கொந்தளிப்பான ஆக்‌ஷன் திரில்லர் என்று கூறப்படும் இப்படம், கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, நீதி காற்றில் கரைந்து போகும்போது, அதன் மூலம் தீயவர்களின் ஆதிக்கம் அதிகமாகும் போது, எழும் தனி நபர்களின் கோபத்தின் எழுச்சி பற்றி பேசுகிறது. ஹனி பீ கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் தீரன். அஞ்சி ஒளிப்பதிவைக் கையாளுகிறார், யாமிருக்கா பயமே புகழ் பிரசாத் எஸ்.என். இசையமைக்கிறார், பியார் பிரேமா காதல் புகழ் மணி குமரன் சங்கரா படத்தொகுப்பு செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img