spot_img
HomeNewsநான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்" ''நடிகர் சூர்யா''

நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” ”நடிகர் சூர்யா”

“ஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்டது” ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பாராட்டு!!

2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னையில் உள்ள  ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது.

விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது,

“இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்  சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளே உடனே கொடுப்பார். ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு” என்றார்

ஒளிப்பதிவாளர் ஆனந்த் பேசியதாவது,

“படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கிறோம். ஜோதிகா மேடத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். ரொம்ப நிதானமா இருப்பாங்க. அவர்களிடம் இருந்து நிறைய கத்துக்கணும். நான் கேட்ட எக்கியூப்மெண்ட்ஸ் எல்லாத்தையும் கொடுத்தாங்க. சூர்யா சாரும் படத்தை நல்லா பாராட்டி இருக்கிறார்” என்றார்

ஸ்டண்ட் மாஸ்டர் ராக்பிரபு பேசியதாவது,

“இயக்குநர் கல்யாணம் சார் வேகத்திற்கு ஈடு கொடுக்கவே முடியாது. என்னிடம் முதலில் இது காமெடி படம் என்று தான் சொன்னார்கள். ஆனால் ஒரு ஆக்‌ஷன் படம் அளவிற்கு சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளது” என்றார்

காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா பேசியதாவது,

“இது எங்களுக்கு பேமிலி புரொடக்சன் டே நைட் ப்ரேக் இல்லாமல் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் கல்யாண். ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை பைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸுக்காக நாங்கள் எடுத்து வரும்  காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்” என்றார்

நடிகை தேவதர்ஷனி  பேசியதாவது,

“படத்தில் கல்யாண் சார் எனக்கு இத்தூனுண்டு கேரக்டர் தான் கொடுத்தார். ஆனால் அது செம்ம க்யூட்டான சீக்வென்ஸ். இந்தப்படத்தில் வொர்க் பண்ணது ஜாலியாக இருந்தது” என்றார்

நடிகர் ஜெகன் பேசியதாவது,

“இந்தப்படத்தில் எனக்கு மிக முக்கியமான ரோல். கண் சிமிட்டுவதற்குள் பார்த்து விடுங்கள். இல்லை என்றால் அதற்குள் அந்த சீன் முடிந்துவிடும். நான் நடித்த ரெண்டுநாளும் ரொம்ப என்சாய் பண்ணேன். ஜோதிகாவுக்கு தகுதியான படம் இது. ரொம்ப இதயப்பூர்வமான லேடி ஜோதிகா. தாமரை எழுதிய ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர் ஜோதிகா. தவமே பெற்றவரம் சூர்யா. அவருக்கு நிறம் கொடுத்தவர் ஜோதிகா” என்றார்

நடிகர் தங்கதுரை பேசியதாவது,

“சூர்யா சாரை நேர்ல பாக்க சந்தோஷமா இருக்கு. 30 நாள்ல ஆங்கிலம் படிப்பது எப்படின்னு சொல்வாங்க இல்லியா? அதை மாதிரி 30-நாள்ல படம் எப்படி எடுக்கணும்னு இயக்குநர் கல்யாண் சாரிடம் கத்துக் கொள்ள வேண்டும். சூர்யா சார் தயாரிப்பில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்றார்

நடிகர் அஸ்வின் பேசியதாவது,

“2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் ஒர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

நடிகர் டேனி பேசியதாவது,

“இந்த ஜாக்பாட் படத்தில் நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் நான்கு படத்தில் தான் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு புரொடக்சன் கம்பெனியை நான் பார்த்ததே இல்லை. சாப்பாடு விசயத்தில் மிகச் சிறப்பாக கவனிப்பார்கள். சுகர்லாம் இல்லாமல் நாட்டுச் சக்கரை தான் கொடுப்பார்கள்.  ஜோதிகா மேடம் போல ஒரு ஆக்‌ஷன் ஹீரோ பைட் செய்வாரா என்பதே சந்தேகம். கல்யாண் அவர்கள் மனிதரா இல்லை ரோபோவா  என்று தெரியாதளவில் வேலை செய்கிறவர்” என்றார்

சிங்கர் பிருந்தா பேசியதாவது,

“இந்தப்படத்தின் பாடல்களை மிக என்சாய் பண்ணிப் பாடினோம். நான் பாடும்போது ஆடிக்கொண்டே பாடினேன்” என்றார்

பாடகர் ஆண்டனி தாசன் பேசியதாவது,

“நிறைய விருதுகள் நான் வாங்குவதற்கு காரணம் சூர்யா சார் தான். நான் இப்படத்தில் ஒரு சின்ன பாடல் தான் பாடியுள்ளேன். மேலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளேன்” என்றார்

பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்,

“பாட்டெழுதி முடித்ததும் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு என்று கோ புரொடியூசர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சார்  போன் பண்ணி சொன்னார்.  முதல் முதலாக பாட்டெழுதிய உடனே ஒரு தயாரிப்பு நிறுவனம் சார்பில் போன் பண்ணிய வாழ்த்தியது 2D எண்டெர்டெயின்மெண்ட்-ல் தான். நான் சூர்யா சாரின் ஆயுத எழுத்து படத்தைப் பார்த்த பின் தான் இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஜோதிகா மேடத்தின் ரசிகன் நான். சூர்யா சார் எல்லோரும் பேசத்தயங்கும் விசயங்களை தைரியமாகப் பேசினார். அவர் பேசியதை நாம் வழி மொழிந்து பேச வேண்டும்” என்றார்

பாடலாசிரியர் கார்த்தி பேசியதாவது,

“நம் எண்ணங்களுக்கு ஒரு பவர் உண்டு. ஒவ்வொரு நல்ல எண்ணத்திற்கும் ஒரு கதவு திறக்கும். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்” என்றார்

பாடலாசிரியர்,  பேசியதாவது

இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியதாவது,

“2D எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் என்னிடம் படத்திற்காக கேட்டதே சந்தோஷமாக இருந்தது. ஜோதிகா மேடம் 90’s கிட்ஸ்களின் தேவதை. இந்தப்படத்தில் நிறைய விசயங்களைக் கத்துக்கொண்டேன். நிறைய இனிமையான நினைவுகள் எனக்கு இந்தப்படத்தில் இருக்கு. ரொம்ப ஜாலியான படம் இது. கல்யாண் சார் தூங்குவாரா என்றே தெரியாது” என்றார்

நடிகை சச்சு பேசியதாவது

“கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். சிவக்குமார் பேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா எங்கள் முதலாளி அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும்” என்றார்

நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது,

” சிவக்குமார் அவர்களின் அர்ப்பணிப்புகளை உள்வாங்கி சூர்யா சிறந்த படங்களை கொண்டு வரும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஜோதிகா நடித்ததும் எனக்குப் பயம். ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் எப்படி பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் குஷி படத்தில் பட்டபாடு தான் தெரியுமே. ஜோதிகாவைப் பார்க்கும் போது ராஜராஜ மன்னன் போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும். கல்யாண் மிகப்பெரிய இயக்குநராக வருவார். அவரோட ஸ்லாங் எல்லாருக்கும் பிடிக்கும். கல்யாண் படத்தில் நடிப்பது அத்திவரதர் தரிசனம் கிடைத்த மாதிரி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். இந்தப்படம் எனக்கு நல்ல அனுபவம். தேவா படத்தில விஜய் கூட நடிச்சேன். ப்ரேம்ல கொஞ்சம் பிசகி நின்னா கூட சிவக்குமார் அய்யா கோபப்படுவார். இந்தப்படம் பெரிய வெற்றி பெருவதோடு அவார்டும் வாங்க வேண்டும். சூர்யா பேசிய கல்விக்கொள்கைக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். செந்தமிழன் சீமான் ஆதரவு கொடுத்துள்ளார். இன்னும் எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசின் காதுக்கு கேட்கும்” என்றார்

தயாரிப்பாளர் சக்திவேல் பேசியதாவது,

“ஒரு படத்தின் வெற்றி என்பது பர்ஸ்டே பர்ஸ்ட் சோவில் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு முன்னாடியே தெரிந்து விட்டது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் பல திரையரங்க உரிமையாளர்கள் போன் பண்ணி கேட்கிறார்கள். இந்தப்படம் அவ்ளோ நல்லாருக்கு. ஜோதிகா மேடம் நடித்ததிலே இந்தப்படம் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் படங்களை வெளியீடுவதை  பெருமையாகச் சொல்வேன். சூர்யா அண்ணன் என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காக வேகமாக ஓடுவோம்.” என்றார்

இயக்குநர் கல்யாண் பேசியதாவது,

“எனக்கு பெரிய ஜாக்பாட் என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட் தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார்.
ஸ்பாட்டில் சூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார். படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார். விஷால் சந்திரசேகர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் பவர்புல்லான இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்” என்றார்

நடிகர் சூர்யா பேசியதாவது,

“இன்றைய ஹீரோ விசால் சந்திரசேகர். என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமேஸும் இல்லாமல் சரியாச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்

தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் பேசியதாவது,

” எனக்குச் சூர்யா நண்பராக கிடைத்தது ஜாக்பாட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டைக் கேட்டு சிரித்தளவுக்கு வேறு எந்தக்கதையைக் கேட்டும் நாங்கள் சிரித்ததில்லை. 2D எண்டெர்டெயின்மெண்ட் பேர்லே எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு. எங்கள் கதைகளில் 70% கமர்சியல் இருக்கும் 30% மெசேஜ் இருக்கும். கல்யாண் வெறித்தனமாக வேலை செய்பவர். அவரது டீமும் அப்படித்தான்” என்றார்

நடிகை ஜோதிகா பேசியதாவது,

“முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருசத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோஸ் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார். பாடல்கள் ரொம்ப நல்லாருந்தது. பெண்களுக்குப் பவர் வேண்டும். இந்தப்பாடல்களில் அது இருக்கிறது. எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இந்தப்படத்தில்  எனக்கு என் ஹஸ்பெண்ட் சண்டைக்காட்சிகளுக்கான கிட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தார். அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்தப்படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய  ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img