மூடர் கூடம்‘ இயக்குனர் நவீன் தயாரிப்பில், அவரது அசோசியேட் தன்ராம் சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி சங்கவி மற்றும் நடித்து வெளிவந்து இருக்கும் படம் ‘கொளஞ்சி‘
சமுத்திரகனி, சங்கவி தம்பதியின் மகன் கிருபாகரன் ( கொளஞ்சி )6-ம் வகுப்பு படித்து வருகிறான். வாலுப் பையனான கிருபாகரன், நண்பன் நசாத்துடன் சேர்ந்து சேட்டை செய்துகொண்டு ஊர்ச்சுற்றி திரிகிறான். இதனாலேயே அப்பாவிடம் அடி வாங்காத நாளே இல்லை என்றாகிவிடுகிறது.சமுத்திரகனி அவனை கண்டிக்கிறார்.
அப்பாவை வெறுக்கும் கிருபாகரன் ஒரு அம்மா செல்லம்.
இதனால் அப்பா மீது கோபமும் வெறுப்பும் உண்டாகிறது. அந்த வெறுப்பு ஒரு பக்கம் அதிகமாகிக்கொண்டே போக சமுத்திரக்கனிக்கும், சங்கவிக்கும் ஒரு நாள் பெரிய சண்டை வர, மோதல் ஏற்பட்டு பிரிகின்றனர். எப்படியாவது தப்பித்தால் போதும் என கிருபாகரன் அம்மாவுடன் வந்துவிடுகிறார். அப்பாவும் இளைய மகனும் ஒரு வீட்டில் இருக்க, அம்மாவுடன் தாய் மாமா வீட்டில் தஞ்சடைகிறான் கிருபாகரன்
தம்பதியர் சேர்ந்தனரா? அப்பா, மகன் உறவு என்ன ஆகிறது ??
சமுத்திரகனியின் பாசத்தை கிருபாகரன் புரிந்துகொண்டாரா?
என்பதே மீதிக்கதை.
கிருபாகரனும், நசாத்தும் செய்யும் சேட்டைகள் செம ரகளை. நிறையவே சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள். சிறுவன் கிருபாகரன் அடிக்கும் லூட்டி அந்த வயதுக்கு உரியது என்றாலும்
அருவாள் வைத்து மிரட்டி ஐஸ்கிரீம் வாங்குவது கொஞ்சம் ஓவர்
அப்பா மகன் கதை என்றால் அப்பாவாக சமுத்திரக்கனி தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சங்கத்தில் எழுதப்படாத ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது போலிருக்கிறது
கருப்புச்சட்டை காரராக பெரியாரின் கொள்கையில் கடைபிடிக்கும் தொண்டனாக சமுத்திரக்கனி பெரியார் அடிக்கடி சொல்லும் வெங்காயம் வார்த்தையை சமுத்திரக்கனியும் இந்த படத்தில் அடிக்கடி உபயோகிக்கிறார்
பெரியாரின் கொள்கைகள் அங்கங்கு தெளித்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி வாயிலாக
விஜய் படத்தில் கதாநாயகியாக நடித்த சங்கவி இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடி நீண்ட இடைவெளி என்றாலும் நடிப்பில் நல்ல முதிர்ச்சி வருங்காலம் தமிழ் திரை உலகில் அவருக்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும்
கதையின் கருவை எடுத்துக் கொண்டாள் அப்பா மகன் புரிதல் ஆனால் அதை சொல்வதற்கு நடுவில் சிறு காதல் கதை படத்தின் இளம் ஜோடியான ராஜாஜி சைனா நர்வார் காதல் காட்சிகள்
இருவரும் கொடுக்கும் முத்தக்காட்சிகளில் சிறுவர்களை வைத்திருப்பது சரியா தவறா இயக்குனர் தான் சொல்ல வேண்டும்
கொளஞ்சி- அப்பா பார்ட் 2