spot_img
HomeNewsடிரண்ட் லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜீ 5 இணைந்து வழங்கும் அதிரடி - காமெடி...

டிரண்ட் லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜீ 5 இணைந்து வழங்கும் அதிரடி – காமெடி நிறைந்த, புத்தம் புதிய இணைய தொடர் —;கரோலின் காமாட்சி

முதன் முறையாக இணைய தொடரில் மீனா
டிரண்ட் லவுட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜீ 5 இணைந்து
வழங்கும் அதிரடி – காமெடி நிறைந்த, புத்தம் புதிய இணைய தொடர் 'கரோலின்
காமாட்சி'
டிரண்ட் லவுட் தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நெட்வொர்க்,  ஜீ 5 உடன்
மீண்டும் இணைந்து,  தனது பத்தாவது தயாரிப்பாக வழங்கவிருக்கும் ஒரு புத்தம் புதிய
இணைய தொடர், அதிரடி – காமெடி நிறைந்த கரோலின் காமாட்சி.
இணையத் தொடரில் நடிகை மீனா மற்றும் நடிகை ஜியோர்ஜியா அன்ரியானி முக்கிய
வேடத்தில் நடிக்கின்றனர்.
டிரண்ட் லவுட் பன்முக நடிகை மீனாவை முதன் முறையாக இணையத்தொடருலகிற்கு
அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
இந்த இணையத் தொடருக்கான படப்பிடிப்பு போட்டோ ஷூட்டுடன் இன்று
துவங்கியது.
இந்திய உளவுத்துறை (CBI) அதிகாரியாகப் பணியாற்றும் காமாட்சி மற்றும் பிரஞ்சு
உளவுத்துறை (DGSE) அதிகாரியாகப் பணியாற்றும் கரோலினையும் பற்றியதே
கரோலின் காமாட்சி தொடரின் கதை களம். தேசத்தால் மாறுபட்டாலும், பணியில்
ஒன்றிணைந்து பணியாற்றும் அவர்களின் பயணமே இந்த தொடர் .
தந்தையின் உயிரிழப்பால் வாரிசு அடிப்படையில் இப்பணியில் அமர்த்தப்பட்ட
தனித்துவமான பிராமணப்பெண் மீனா, இத்தகைய கடின வேலைகளை சற்றும்
விரும்பாதவர் என்றாலும் தனது புத்திசாலித்தனத்தாலும் நகைச்சுவையாலும் சமாளித்து
வருகிறார்.
பிரஞ்சு உளவுத்துறை (DGSE) அதிகாரியான கரோலின் ஒரு கவலையற்ற, கரடு முரடான
நவநாகரீக பெண்மணி. அவர்
விடுமுறைக்காக பாண்டிச்சேரி வந்திருக்கிறார்.
ஒரு மோசமான கடத்தல்காரனிடம் சிக்கியுள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு
கலை பொக்கிஷத்தை மீட்கும் பொறுப்பை, விடுமுறைக்கு வந்த இடத்தில் தன்னுடைய
மேலதிகாரியின் வற்புறுத்தலால்,தென்னிந்திய பிராமணப் பெண்ணான CBI அதிகாரி

காமாட்சியுடன், இந்த பணியில் இணைகிறார் கரோலின்.  இந்த மாறுபட்ட ஆளுமைகள்
இருவரும் இணைந்து அந்த பொக்கிஷத்தை எப்படி மீட்டார்கள் என்பதே கதை.
இயக்குனர் பாலாவிடம் பல படைப்புகளில் இணைந்து பணியாற்றியவரும்,  நடிகர்
அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'பாக்ஸர்' திரைப்படத்தின்
இயக்குனருமான விவேக் குமார் கண்ணன், இத்தொடரை இயக்குகிறார். இவருடன்
பல்வேறு படைப்புகளில் இணைந்து பணியாற்றிய பாலாஜி இத்தொடரையும்  ஒளிப்பதிவு
செய்கிறார்.
உயர்தர வல்லுனர்கள், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், கேலி, கிண்டல், நகைச்சுவை,
அதிரடி, திகில் என சுவாராஸ்யமான ஒரு கலவையில், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு
அம்சங்களை உள்ளடக்கியது இந்த இணைய தொடர்.
டிரண்ட் லவுட் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிதம்பரம் நடேசன் பேசும்
போது, 'மீண்டும் ஜு 5 வுடன் இணைந்து இத்தகைய பிரமிப்பான கதைகளத்தில்
பணியாற்றுவதிலும், இத்தகைய நகைச்சுவை கலந்த அதிரடி தொடர்களை
உருவாக்குவதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பன்முக நடிகை மீனாவை இணைய
உலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த வாய்ப்பு மிகவும் பெருமிதத்துக்குரியது. எந்நேரமும்
தரமான தனித்துவமான படைப்புகளை உருவாக்குவதில் தன்முனைப்புடன் செயல்படும்
எங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கரோலின் காமாட்சி தற்கால
சந்ததியின் ரசனைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை
கொண்டிருக்கிறோம்.'
டிரண்ட் லவுட்:
அனைத்து ஊடக தளங்களிலும் தரமான படைப்புகளின் மூலம் தடம் பதித்து வரும் ஒரு
முன்னணி டிஜிட்டல் நிறுவனம் டிரண்ட் லவுட்.  இவ்வருடம் தனது ஐந்தாம் வருடத்தில்
கால் பதிக்க போகும் இந்நிறுவனம், இணைய வழி ஊடக தளங்களில், பல்வேறு
மொழிகளில், பத்துக்கும் மேற்பட்ட உயர்தரமான வெற்றி நிகழ்ச்சிகளைப் படைத்து, ஒரு
புதிய பரிமாணத்தை உருவாக்கி, தென்னிந்தியாவின் மிகச்சிறந்த படைப்பு நிறுவனமாக
முன்னணி வகிக்கிறது.  மேலும், முன்னணி இயக்குனர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள்,
படைப்பாளிகள் ஆகியோருடன் இணைந்து தரமான, புதுமையான படைப்புகளை
உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்நிறுவனம்
வளர்ந்து வரும் புதிய படைப்பாளிகளை அடையாளங்கண்டு ஊக்குவித்தும் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img