spot_img
HomeNewsஇயல் இசை நாடகம் - அனைத்திலும் தடம் பதிக்கும் நடிகை Y.G.மதுவந்தி

இயல் இசை நாடகம் – அனைத்திலும் தடம் பதிக்கும் நடிகை Y.G.மதுவந்தி

முந்தைய காலங்களில் நாடக துறையில் சிறப்பாக நடித்த நடிகர்கள் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு முன்மொழியப்பட்டனர். நடிப்பு என்ற ஒரு கலையின் உட்பொருளை தெளிவாக கற்றுக்கொடுக்கும் ஒரு துணையாக நாடக மேடைகள் அன்று நடிகர்களுக்கு விளங்கியது.

இன்று ஒருசிலரே அப்படிப்பட்ட நாடக கலாசாரத்தை பின்பற்றி வருகின்றனர். நடிகர் Y.G.மகேந்திரா இன்றளவும் நாடக மேடைகள் அமைவதில் பெரும் பங்கு வகிக்கின்றார். அவரை தொடர்ந்து அவரது மகளுமான Y.G.மதுவந்தி மேடை நாடகம் எனும் விருந்தை மக்களுக்கு அளித்து வருகின்றார்.

Y.G.மதுவந்தி தனது தந்தை Y.G.மகேந்திராவுடன் மேடை நாடகங்களில் நடிக்க துவங்கி கடந்த 7 வருடமாக அவரே மேடை நாடகங்கள் தயாரித்து வெளியிட்டு பெரும் வெற்றியையும் பெற்றுள்ளார். Theatre of Maham எனும் இவரது மேடை நாடகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சிவசம்போ, பெருமாளே, தில்லாலங்கடி மோகனாம்பாள் உள்ளிட்ட நாடகங்களை தயாரித்துள்ளார். இவை அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றதுமட்டுமின்றி 50க்கும் மேற்ப்பட்ட இடங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த நாடகங்கள் மேடையெற்றப்பட்டது.

பரதநாட்டிய கலைஞர், மேடை பாடகி, நடிகை என இயல் இசை நாடகம் என்று மூன்று துறையிலும் தனது தனிதுவத்தை நிருபித்திருக்கிறார்.

தற்போது நாடகங்கள் மட்டுமன்றி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை Y.G.மதுவந்தி, பல படங்களில் நடித்தும் வருகிறார்.

குடும்ப பாங்கான, சவாலான கதாபாத்திரங்கள் உள்ள நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்குமென்றும், அப்படி பட்ட கதாபாத்திற்காக தான் நடிப்பதற்கு எப்பவும் ரெடி என்றும் கூறுகிறார் Y.G.மதுவந்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img