spot_img
HomeNewsஎன்னை நம்பிய ஐசரி கணேஷ் சாருக்கும் , ஜெயம் ரவி சாருக்கும் நன்றி= " கோமாளி"...

என்னை நம்பிய ஐசரி கணேஷ் சாருக்கும் , ஜெயம் ரவி சாருக்கும் நன்றி= ” கோமாளி” இயக்குனர் பிரதீப்.


இன்றைய இளைய தலைமுறையின் மிக பெரிய பலமே அவர்களின் பரந்து விரிந்த கற்பனை  திறன் தான்.  அந்த தரமான வரிசையில் அடுத்ததாக இணைய போகிறவர் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.வருகின்ற 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பெரும் எதிர்பார்ப்போடு வெளி வர இருக்கும் “கோமாளி” படத்தின் மூலம் அறிமுகமாகும் பிரதீப் ரங்கநாதன் தமிழ்  திரை உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்வார் என திரை உலகம் கணிக்கின்றது.
” இந்த புகழ் மற்றும் பாராட்டு அனைத்துமே எனக்கு உரியவை அல்ல. எங்கள் குழுவினர் அனைவருக்குமே உரியதானது.ஜெயம் ரவி முதல் காஜல் அகர்வால், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட அனைவருக்கும் உரியது. இக்கட்டான , சவாலான நேரங்களில் இவர்கள் மூத்தவர்களாக எனக்கு கொடுத்த தைரியம் மற்றும் ஊக்கம் மறக்க முடியாதது.என்னை போன்ற அறிமுக இயக்குனரை துணிந்து அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் ஐசரி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் என் நன்றி உரியது. குறிப்பாக என் கலை இயக்குனர்       , மற்றும் அவரது குழுவினருக்கு உளமார்ந்த நன்றி. குறிப்பாக அந்த சென்னை வெள்ள காட்சிகளில் அவர்களது உழைப்பும், திட்டமிடுதலும் சொல்லில் அடங்காதவை. படத்தின்  வெள்ளோட்டம் (ட்ரைலர் )  ரசிகர்களுக்கு படம் எதை பற்றியது என்பதை தெளிவாக கூறி விட்டது.
படத்தின் மைய கருத்து  90ஸ் கிட்ஸ் எனப்படும் 90 இல் பிறந்த இளைஞர்களின் சாதனையையும் , அவர்களின் தற்போதைய அனுசரிப்பை பற்றியும் பேசும்.  இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும் ”  என்கிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவர உள்ள “கோமாளி” படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளி இடுகிறது. ஜெயம் ரவி , காஜல் அகர்வால் இணையாக நடிக்க சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்க , ஹிப் ஹாப் ஆதி இசை அமைப்பில் , வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img