ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ இது என் காதல் புத்தகம் “
அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியான “ தேவயாணி “ கதாபாத்திரத்தை ஏற்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – அருண்கிருஷ்ணா
இசை – ஸ்ரீமாதவ்
பாடல்கள் – விஷ்ணுவிகடன்
எடிட்டிங் – சாஜித் முகமது
கலை – லால் திரிகுளம்
ஸ்டன்ட் – மது பீட்டர்
நடனம் – தண்டபாணி
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ஆண்டனி நிலம்பூர்.
தயாரிப்பு – ரோஸ்லேண்ட் சினிமாஸ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மது G கமலம். இவர் மலையாளத்தில் நான்கு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது.
கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர் விவசாயம் செய்வதற்கும், திருமணம் முடித்து பிள்ளை பெறுவதற்கும் உங்களுக்கு எதற்கடா கல்வி என்று சொல்லுகிறார். ஆனால் அவரது ஒரே மகளான தேவயாணி ( நாயகி )க்கு படிப்பின் மீது நாட்டம் ஏற்படுகிறது. அதனால் தந்தையின் சிந்தனைக்கு எதிராக செயல்பட தொடங்குகிறாள் அதனால் அவள் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறாள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
இசைக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த படத்தில் டாக்டர் வைக்கம் விஜயலெட்சுமி பாடிய பாடல் உட்பட நான்கு பாடல்கள் உள்ளன. விரைவில் வெள்ளித்திரையில் “இது என் காதல் புத்தகத்தை “ படிக்கலாம் என்கிறார் இயக்குனர் மது G கமலம்.