சரித்திரம் படைத்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, உலகை உலுக்கிய நிகழ்வுகள், நிழல் உலகை கலக்கிய தாதாக்கள், வரலாற்றில் தடம் பதித்த முக்கிய நாட்கள், திரையுலகில் கோலோச்சிய உச்ச நட்சத்திரங்கள், விளையாட்டுத் துறையில் சிகரம் தொட்ட சாதனையாளர்கள் என சரித்தரங்கள் மற்றும் சமகால நிகழ்வுகளையும் அரை மணி நேர தொகுப்பாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நாள்தோறும் மாலை 6.30 மணிக்கும், அதன் மறு ஒளிப்பரப்பு இரவு 9.30 மணிக்கும் ஒளிபரப்பப்படுகிறது
காந்தி, நேரு, வல்லபாய் படேல், பெரியார், காமராஜர், கக்கன், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ,தமிழிசை மற்றும் கனிமொழி முதல் சமகால அரசியலில் கால் பதித்துள்ள கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் இசை ஞானி இளையராஜா ,கிரேசி மோகன் ,கிரிக்கெட் வீரர் யுவராஜ் , இஸ்ரோ தலைவர் சிவன் என தேசிய மற்றும் தமிழக ஆளுமைகள் குறித்த தொகுப்புகள் நியூஸ்7 தமிழில் ஒளிப்பரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இத்துடன் காரல்மார்க்ஸ், ஸ்டாலின், டொனால்ட் ட்ரம்ப், ஜஸ்டின் ட்ரூடோ, சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ என வெளிநாட்டு தலைவர்கள் பற்றியும் ஆவணமாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அரை மணி நேர தொகுப்புகள் நியூஸ்7தமிழின் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த தொகுப்புகள் இன்றைய தலைமுறையினருக்கு வரலாறு மற்றும் சமகால நிகழ்வுகளை பற்றி அரை மணி நேரத்தில் முழுவதுமாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளது