spot_img
HomeNews9 வயதில் 200 பதங்கங்கள் உலக சாதனை படைத்த இரட்டையர் மற்றும் அவர்களின் மாஸ்டருக்கு கௌரவ...

9 வயதில் 200 பதங்கங்கள் உலக சாதனை படைத்த இரட்டையர் மற்றும் அவர்களின் மாஸ்டருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள  இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி புதுச்சேரி ஆளுநர் . முதல்வர்   மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டை பெற்ற  காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும்  இரட்டையர்களான கே.ஸ்ரீ விசாகன் வயது 9 மற்றும் கே ஸ்ரீஹரிணி வயது 9 இவர்களின்  சாதனையை சிறப்பிக்கும் விதமாக பள்ளியின் சார்பாக  தயார் செய்யப்பட்ட  புத்தகத்தை சமீபத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள் வெளியிட்டார் இவர்கள் உலகிலேயே முதன்முதலாக ஒரே நேரத்தில் சகோதர சகோதரியாக பிறந்த இரட்டையர்கள் 6 வயது முதல் 9 வயது வரை கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்ததால் இவர்களுக்கு சமீபத்தில் வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் ( WILL MEDAL OF WORLD RECORDS ) மற்றும் வில் மெடல் கிட்ஸ் ரெக்கார்டர்ஸ்  ( WILL MEDAL Kids RECORDS ) ஆகியவற்றில் உலக சாதனையை பதிவு செய்து சான்றுகள் வழங்கப்பட்டது இந்த சாதனையை மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் ( UNIVERSAL ACHIEVERS BOOK OF RECORDS.) மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் ( future kalam book of records ) ஆகியவற்றிலும் உலக சாதனையாக பதியப்பட்டது’  மேலும் இவ்விழாவில்  ஸ்ரீ விசாகன் கண்களை கட்டிக் கொண்டு குறுகிய நேரத்தில் பல்வேறு தற்காப்பு கலைகளை செய்து காண்பித்ததும் கே ஸ்ரீஹரிணி குறுகிய நேரத்தில் பல்வேறு தற்காப்பு கலைகளின் ஆயுதத்தை பயன்படுத்தி தற்காப்பு கலைகளை செய்து காண்பித்ததும் இருவரும் புதிய உலக சாதனை செய்ததால் இவர்களுக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது    மேலும் இரட்டையர்களின்   வி.ஆர்.எஸ் குமார் குமாருக்கு   இருபத்தைந்து வருடங்களாக தற்காப்பு கலைகளில்  சேவையாற்றி பல்வேறு மாணவ மாணவியர்கள் உருவாக்கியதால் அவர்களைப் பாராட்டி அவருக்கும் கௌரவ டாக்டர்  பட்டம் வழங்கப்பட்டது 29.09.2019 அன்று சென்னை அண்ணாநகரில் நடந்த விழாவில் உலக சாதனைக்கான சான்றுகள் மற்றும் கௌரவ டாக்டர் பட்டத்துக்கான சான்றுகள் வழங்கப்பட்டது இவ்விழாவில் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன், முதன்மை அலுவலர் செல்வம் உமா மற்றும்.பெற்றோர் மற்றும் பலர் இருந்தனர்  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img