spot_img
HomeNewsஅசுரன் படத்திற்கு சிறப்புக்காட்சிகள் மற்றும் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு !

அசுரன் படத்திற்கு சிறப்புக்காட்சிகள் மற்றும் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு !

கலைப்புலி s தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த படம் அசுரன் ! இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார் . இவர்களுடன் அம்மு  அபிராமி ,டிஜே அருணாச்சலம், பாலாஜி  சக்திவேல் ,பிரகாஷ்ராஜ் ,கென் கருணாஸ் ,பசுபதி ,சுப்ரமணியம் சிவா  ,பவன் ,ஆடுகளம் நரேன் ,நித்திஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர் . GV பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார் . வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .

இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பும் , வசூலும் பெற்று வருகிறது .

பொதுவாக தமிழ்நாட்டில் பெரும்பாலான நடிகர்களின் படம் வெளியாகும்போது காலை சிறப்பு காட்சிகள்  எதுவும்  இருக்காது . உச்ச நடிகர்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகள் இருக்கும் . அதேபோல் அசுரன் படம் நேற்று வெளியானது . சென்னையில் மட்டுமே ஒரு சில தியேட்டர்களில் காலை 8 மணி  சிறப்பு காட்சிகள் இருந்தது .

இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் காலை 8 மணி சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 450 தியேட்டர்களில்  சிறப்புக்காட்சிகள் நடைபெற்றது .

கர்நாடகாவில் மட்டும் 90 தியேட்டர்களில்  திரையிடப்பட்டது  . மேலும் 5 தியேட்டர்கள் சேர்க்கப்பட்டது .

திருநெல்வேலி மாவட்டம் , தென் ஆற்காடு , வட ஆற்காடு மாவட்டங்களிலும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது .

இதுபோன்ற சிறப்புக்காட்சிகள் பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , தளபதி விஜய் , அஜித்குமார் போன்ற நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம் . அந்த பட்டியலில் தனுஷும் இணைந்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img