ஒளிப்பதிவு மேதை P C ஶ்ரீராமுடன் இணைந்த  “தும்பா” பட இயக்குநர் ஹரீஷ் ராம். 

1422

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக போற்றப்படும்  P C ஶ்ரீராம் சில வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  இம்முறை அவர் NAC ஜிவல்லர்ஸ்க்கான விளம்பரபடத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்ற “தும்பா” படத்தின் இயக்குநர் ஹரீஷ் ராம் இந்த விளம்பரபடத்தை இயக்கியுள்ளார். P C ஶ்ரீராமுடன் வேலை செய்தது தன் வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனப்பெருமையாக கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது…

இது எனக்கும் எங்களது குழுவுக்கும் கிடைத்த மிகப்பெரும் கௌரவம். இரட்டை  சந்தோஷம். விஷுவலில் மேஜிக் நிகழ்த்தும்,  இந்தியாவின்  சிறந்த ஒளிப்பதிவாளர்களின் குருவாக விளங்கும் P C ஶ்ரீராம் சார் எங்களது குழுவுடன் இணைந்து பணியாற்றியது வாழ்நாளில் மறக்க முடியா பேரின்ப அனுபவம். புதிதாக இயக்குநராகும் ஒவ்வொருவருக்கும் அவருடன் பணியாற்ற வேண்டுமென்பதே கனவு.  எனக்கு அந்தக் கனவு NAC ஜீவல்லர்ஸ் விளம்பர படம் மூலம் நிறைவேறியது நிறையவே  மகிழ்ச்சியை தந்துள்ளது. அவரது ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிரூட்டியது மட்டுமன்றி திரை அனுபவத்தை வேறு வடிவத்திற்கு உயர்த்தி சென்றிருக்கிறது. அப்பா மகளுக்கான உறவை அழகுறச் சொல்லும் விளம்பரத்தின் உணர்வின் வடிவத்தை ஒளிப்பதிவால் சிறப்பாக்கியிருக்கிறார். அவருக்கு நன்றி. மேலும் தங்கள் நடிப்பால் இதனை முழுமைப்படுத்திய நடிகை சமந்தாவிற்கும், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சாருக்கும் நன்றி. இந்த வாய்ப்பினை தந்து மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கிய NAC ஜிவல்லர்ஸ்க்கும் நன்றி.