ஒரு தமிழனாகப் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும்,
தமிழின் மீதும் தமிழ் கலை-கலாச்சாரங்களின் மீது பெருமதிப்பு
கொண்டு, தனித்துவமான, உணர்வுபூர்வமான திரைப்படங்களை கைபா பிலிம்ஸ் என்ற எனது நிறுவனத்தின் மூலம் நான் தயாரித்து வருவது நீங்கள் அறிந்ததே.
2019 ஒரு கிடைத்தற்கரிய ஒரு மிகச் சிறந்த ஆண்டு, ஏனெனில் இது ‘மகாத்மாவின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆண்டு. இத்தகைய
ஒரு மிகச் சிறந்த ஆண்டில், அமெரிக்காவின் மிகவும் பழமையான
, பாரம்பரியமிக்க லாபநோக்கமற்ற நிறுவனங்களில் முன்னணி நிறுவனம்
‘மெட்ரோபாலிட்டன் ஆசியன் ஃபேமிலி சர்வீசஸ் இன்க்’.
தனது அர்பணிப்பான பயணத்தில் 27வது ஆண்டில் அடியெடுத்து
வைக்கும் இந்நிறுவனம், இந்த ஆண்டை ‘மகாத்மாவின் 150வது பிறந்த நாள்
விழா சிறப்பு ஆண்டாக’ கொண்டாட
முடிவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக, பல்வேறு துறைகளிலும் காந்தீய வழிகளில், அவரது பெருமதிப்பிற்குரிய கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களை
தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் வகையில் ‘டாப் 20 க்ளோபல் ஐகான்ஸ்’ விருது வழங்க தீர்மானித்திருக்கிறார்கள்.
வரும் அக்டோபர் 12ம் தேதி, அமெரிக்காவின் இல்லினாயிஸ் நகரில் சுமார் 1000 சிறந்த தலைவர்கள், மற்றும் தனித்துவமானவர்கள் முன்னிலையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் எனக்கும் அந்த விருது வழங்கப்படவிருக்கிறது.
அமெரிக்காவுக்கான Indian Consul General, Chicago Sudhakar Dalela and US Congressman Raja Krishnamoorthy அவர்கள் இந்த விருதை வழங்கி கௌரவிக்கவிருக்கிறார்கள்.
இந்த பொன்னான தருணத்தில், ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக, மகாத்மா காந்தியின் மண்ணின் மைந்தனாக இந்த விருதை நான் பெறும் மட்டற்ற மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
என்றும் உங்கள் ஆதரவை போற்றும்,
டெல் கே கணேசன்