spot_img
HomeNewsஹீரோயிசம்' கேரக்டரில்  நடிக்கும் ஹன்சிகா.

ஹீரோயிசம்’ கேரக்டரில்  நடிக்கும் ஹன்சிகா.

ஹீரோயிசம்’ கேரக்டரில்  நடிக்கும் ஹன்சிகா.
நெகட்டிவ் கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிமுகம்.
விஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி  போன்றோர் ஹீரோக்களை போன்று தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்து வசூல் ரீதியாகவும்  வெற்றிபெற்றுள்ளனர்.  இப்பொழுது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது.
இப்படத்தை , யோகிபாபு நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற ‘தர்மபிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ்    P.ரங்கநாதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
ஹாரர் , காமெடி ,பேய்ப்படமாக   அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இக்கதையை  அமைத்துள்ளார்கள்.
இதில் இன்னொரு சிறப்பம்சமாக முக்கிய வேடத்தில் -நெகடிவ் கேரக்டரில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.
இப்படத்தை இரட்டையர்களான
ஹரி -ஹரிஷ் இயக்குகிறார்கள்  சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான இவர்கள் ஏற்கனவே  ‘அம்புலி’ ,              ‘ ‘ ‘அ ‘ (AAAH ),  ‘ஜம்புலிங்கம்’  போன்ற படங்களை இயக்கியுள்ளார்கள் .
டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் இப்படத்தை 2020 கோடை விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img