பெட்ரோமாக்ஸ் விமர்சனம்
செந்தில்: அண்ணே லைட் எப்படினா எரியுது
கவுண்டமணி : கோமுட்டி தலையா இங்க இருக்கு பாத்தியா இதுக்கு பேரு தான் மேன்டில் இதுல தான்டா எரியுது
செந்தில்:: அது எப்படின்னு எரியும் (மேன்டிலை உடைத்தல்)
இந்த காமடியை தெரியாதவர்கள் தமிழகத்தில் இருக்க மாட்டர்கள் அது மட்டுமல்ல
கவுண்டமணியிைன் “” பெட்ரமாஸ்” லைட்டேதான் வேணுமா ?
இந்த டயலாக்க யாரும் மறந்திருக்க மாட்டார்கள்
அந்த தலைப்பில்வந்திருக்கும் பெட்ரோமாக்ஸ் படமும் காமெடிக்கு உத்தரவாதம்
வாருங்கள் படத்தின் கதைக்கு செல்வோம்
தெலுங்கில் வெளிவந்த”
“ஆனந்தோ பிரம்மா”படத்தின் தமிழாக்கம் தான் “”பெட்ரோமாக்ஸ்””மலேசியாவில் வசித்து வரும் பிரேம் கேரள வெள்ளப்பெருக்கில் தன் தாய் தந்தை இறந்த காரணத்தால்
இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டை விற்க முயற்சிக்கிறார் பிரேம்.
ஆனால் அங்கே வசிக்கும் தமன்னா உள்ளிட்ட 4 பேய்கள் வீட்டை விற்க விடாமல் தடுக்கின்றன. வீடு வாங்க வருபவர்களை பயமுறுத்தி அனுப்பவே வீட்டை விற்கும் முயற்சி தடைபடுகிறது.
முனீஸ்காந்த் வீட்டில் பேய் இல்லை என்று நிரூபித்து விற்று தருவதாக உறுதி தருகிறார்.
அந்த 4 பேய்களும் யார்?
என்ற கேள்விகளுக்கு படம் பதில் தருகிறது.
தமன்னா, யோகி பாபு, முனீஷ்காந்த், சத்யன் என அனைவரும் தங்களது நடிப்பை முழுமையாக கொடுத்துள்ளனர்.
சினிமா பேய் , திருச்சி சரவணகுமார்
காது கேட்காத பேய் சத்யன்
, குடிகார பேய் , காளி வெங்கட்
மூவரும் வயிறு குலுங்க வைக்கிறார்கள்.
முனீஷ் காந்தின் காமெடி யோகி பாபுவின் காமெடியை விட பல மடங்கு ஒர்க் அவுட் ஆகியுள்ளது. யோகி பாபு கெஸ்ட் ரோல் போல ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.
லிவிங்ஸ்டன் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவர் பங்கை சரியாக செய்து கொடுத்துள்ளார்
முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் திரைக்கதை, வசனத்தால் படம் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக மாறி இருக்கிறது.
இந்த படத்துக்கு மிக பெரிய பலம் காட்சிகளை தூக்கி நிறுத்தும் பாக் கிரௌண்ட் இசை ஸ்கோரிங் தான். ஜிப்ரான் பட்டய கிளப்பி இருக்கிறார்.
தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றவாறு ரோகினும் சுரேந்திரநாத்தும் திரைக்கதையை மாற்றி இருக்கிறார்கள்.
பெட்ரோமாக்ஸ்::
பேய் 30%
காமெடி 70%