: இந்தியாவில் பெரிதாக வளர்ந்து வரும் பன்மொழி வாய்த்த ZEE5 app அத்துடைய புத்தம்புது தமிழ் தொடர் போலீஸ் டைரி 2.0வை
வெளியேற உள்ளது. இத்தொடரில் வின்சென்ட் அசோகன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், பூஜா ராமசந்திரன், அஞ்சனா ஜெயபிரகாஷ் மற்றும் பாலாஜி மோகன் நடித்துள்ளனர். வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் நடைபெரும் இத்தொடர் நவம்பர் ஒன்று முதல் ZEE5 appஇல் மட்டுமே
பிரத்தியேகமாக ஒளிபெற உள்ளது.
ZEE5 வெளியிட்ட மற்ற சுவாரசியமான தொடர்கள் கள்ளச்சிரிப்பு, ஆட்டோ ஷங்கர், சிகை, களவு, அலாரம், வாட்ஸ் ஆப் வேலைக்காரி, மிட்டா, திரவம், பிங்கர் டிப், போஸ்ட்மேன், இக்லூ மற்றும் நிஷா ஆகியன. இதுமற்றுமின்றி Zee5இல் காணப்படும் வெற்றிபெற்ற தமிழ்ப்படங்கள், சிலவற்றை பெயரிட, தேவி 2, நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா, கோலமாவு கோகிலா, மெர்சல் மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகியன.
குட்டி பத்மினி(அர்பாட் சினி பாக்டரி) தயாரித்துள்ள போலீஸ் டைரி 2.0, ஒரு அதிரடியானத் தொடர். இத்தொடர், தமிழ்நாட்டில் பதிவான 52 கொடிய குற்றச்சாட்டுகளைப் பற்றி விவரிக்கும். ஒவ்வொரு கதைகளும் நன்கு குறித்து சரிபார்த்து, இரண்டு அத்தியாயங்களில் வழங்கப்படும். இரண்டுமே ஒரே வாரத்தில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.
அத்தியாயங்கள் அனைத்தும் திறமைவாய்ந்த இயக்குனர்கள் சிவமகேஷ், தனுஷ், பா. ராஜகணேசன், ர்.பவன், விக்ரனன் மற்றும் ரமேஷ் பாரதி அவர்களால் இயக்கப்பட்டிருக்கிறது.
ZEE5 இந்தியாவின் நிரலாக்க தலை, அபர்ணா அசரெக்கார் கூறியவை, ” ZEE5இல் நாங்கள் எப்பொழுதும் வலுவான கதைகளை எதிர்பாக்கும் நிலையில், போலீஸ் டைரி 2.0 வில் எங்களுக்கு 52 சுவாரசியமான கதைகள்
உள்ளன. குற்றச்சாட்டுக் கதைகளான போலீஸ் டைரி 2.0 மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம்.”
தயாரிப்பாளர் குட்டி பத்மினி (அர்பாட் சினி பாக்டரி) பகிர்ந்துகொண்டது,
” போலீஸ் டைரி 2.0 மாநிலத்தில் நடந்த பல குற்றச்சாட்டுகளின்
கலவையாகும். பார்வையாளர்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டு இதையொட்டி நடக்கும் காட்சிகளிலிருந்து கவனமாக இருங்கள். இந்தியாவில் வெவ்வேறு விதமான பல குற்றச்சாட்டுகள் நடந்துவருகிறது. இத்தொடரின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்குமாறு மற்றும் பார்வையாளர்கள் தனது சொந்தபந்தத்தை பாதுகாத்து வருமாறு நம்புகிறோம். நாங்கள் ZEE5வுடன் இனைந்து செயல்படுவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ZEE5ன் பாரிய அளவிற்கு, இத்தொடர் வேகுதூரம் சென்று வெற்றிபெறும்.”
மூஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாலாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கானொலிகள், முப்பத்தைந்திருக்கும் மேற்பட்ட நாடக நாடகங்கள் மற்றும் என்பதிற்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்கள் பன்னிரண்டு மொழிகளில் உள்ளன. ZEE5 app, நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்க வழங்கலின் கலவையை வழங்குகிறது.