Monday, October 2, 2023
Home 2019 November

Monthly Archives: November 2019

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள  “ராஜ வம்சம் ” பொங்கல் 2020 வெளியீடு !

  செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள   '' ராஜ வம்சம் " படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக...

தம்பி இசை வெளியீடு !

கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி,...

30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் படமான   ஆண்ட்ரியா நடிக்கும்  ” கா “

பொட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா  நடிக்கும் " கா " படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   " கா " என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். ஒளிப்பதிவு  -  அறிவழகன் இசை -  அம்ரிஷ் தயாரிப்பு  -  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -   நாஞ்சில் விறு விறுப்பான படப்பிடிப்பிற்கு மத்தியில் இயக்குனர் நாஞ்சில் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை ... முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டது. அங்கிருந்த நாங்கள் அனைவரும் பயந்து ஒழிந்துகொண்டோம் நல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும் எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம் என்கிறார் இயக்குனர் நாஞ்சில்.

ஆச்சர்யமான -நெகிழ்ச்சியான  என்.எஸ்.கே .விழா!  பாரதிராஜா பெருமிதம்!கலப்பை பி.டி.செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள்!

மறைந்த நடிகர்  என்.எஸ்.கே அவர்களின் பிறந்த தினம் தி.நகர் சோஷியல் கிளப்பில் நகைச்சுவை நடிகர்கள் தினமாக கலப்பை மக்கள் இயக்கம் கொண்டாடியது. இந்த விழாவிற்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். நகைச்சுவையாக நடிப்பது கஷ்டம்- பாரதிராஜா நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல், தன்னிடமுள்ளதை பிறருக்கு வழங்கி வாழும் வள்ளலாக வாழ்ந்தவர் என்.எஸ்.கே.  அவருக்கு இப்படியொரு பிரமிப்பான விழாவை  நடத்துவது  உண்மையிலே மகிழ்ச்சியாக உள்ளது.கிட்டத்தட்ட 108- நகைச்சுவை  கலைஞர்களுக்கு பரிசளித்து  நகைச்சுவை கலைஞர்களை ஒரே இடத்தில் சங்கமிக்க வைத்தது ஆச்சர்யமாக உள்ளது.  பி.டி.செல்வகுமாரின் அன்புக்கு  கட்டுப்பட்டு கலந்து கொண்டேன்.  இந்த விழாவில் கலந்து கொண்டமைக்காக  நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைகிறேன் .நான் இயக்குனராக வரும்போது புதுமைப்பெண் படத்தின் கதையை முதலில் ஜெயலலிதா அம்மையாருக்குத்தான் சொன்னேன் .சொன்னதை அப்படியே கொடுங்கள் சிறப்பாக இருக்கும்  என்று சொன்னார்கள் .அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதும் ,ரேவதியை வைத்து படமாக்கினேன்.  இவ்வாறு பாரதிராஜா பேசினார். எஸ் வி சேகர் : நகைச்சுவை என்பது நமது உடலை மனதை வாழ்க்கையை  உற்சாகமாக வைப்பதாகும்  .என் எஸ்  கே அவர்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் .தான் சம்பாதித்து வைத்ததை தனக்காக மட்டும் இல்லாமல் மக்களுக்காக செலவு செய்து வறுமையால் வாடியவர் .பொதுவாக நகைச்சுவை நடிகர்களின் வாழ்வில் பல சோகம்  இருக்கும். அந்த சோகம் முகத்தில் தெரிந்தால் காமெடி ட்ராஜடியாகி விடும்.  இவ்வளவு நகைச்சுவை  நடிகர்கள் ஒரே இடத்தில் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.  இப்படியொரு அற்புதமான விழாவை ஏற்பாடு செய்த பி.டி.செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்! சி ஆர் . சரஸ்வதி திரைத்துறையில்  சாதனை படைத்தோர்க்கு விழா எடுக்க ஒரு மனசு வேண்டும் .என். எஸ். கே  தான் மருத்துவமனையில் இருக்கும் கடைசி காலத்தில் கூட  உதவி என்று வந்தவருக்கு  தனது வெள்ளி செம்பை கொடுத்தவர்  .அப்படிப்பட்ட மகத்தான கலைஞனை ஞாபகப்படுத்துவது  ஒட்டுமொத்த  சினிமாவிற்கு  செய்யும்  தொண்டாகும் .இந்த விழா நடத்துவதால்  பி .டி .செல்வகுமாருக்கு எந்த வித பயனும் கிடைத்து விட போவதில்லை .ஆனால் என்னை போன்று இங்கு வந்துள்ள அத்தனை நகைச்சுவை நடிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் .அடுத்த வருடம் இந்த விழா இதை விட பெரிதாக நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் . இந்த விழாவை கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்த  பி டி .செல்வகுமார் வரவேற்று பேசினார் . விஜயமுரளி ,டைமண்ட் பாபு ,நெல்லை சுந்தரராஜன் ஆகியோர் பேசினார்கள் .ரமேஷ் கண்ணா ,பவர் ஸ்டார் , பெஞ்சமின்,ஆர்த்தி கணேஷ், சிசர் மனோகர் இசையமைப்பாளர்கள்  சிற்பி, சுந்தர்.சி,  சித்ரா லக்ஷ்மணன் , முத்துக்காளை,கிங்காங்,லக்ஷ்மணன் , பயில்வான் ரங்கநாதன் , போண்டாமணி ,வெங்கல்ராவ்  மற்றும் ஏராளமான நடிகர்கள் வருகை தந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது .

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்து, பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த படத்தின் படப்பிப்பு இன்று (நவம்பர் 28) துவங்கியது. தற்காலிகமாக...

நயன்தாரா – ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு துவங்கியது!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் ஆச்சரியத்தக்க அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் குறித்த உடனடி பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது. கன்னியாகுமரியில் உள்ள பகபதி அம்மன் கோவிலில் சம்பிரதாயமான பூஜைக்குப் பிறகு நாகர்கோவிலில்...

இருட்டு” டிசம்பர் 6 முதல்  திரையில் !

Screen Scene Media Entertainment Pvt ltd தயாரிப்பில்- இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”. ஹாரர் திரில்லர்  படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க,  புதுமுகம் சாக்‌ஷி...

ஆர்.ஜே.பாலாஜி – JioSaavn இணைந்த மைண்ட் வாய்ஸ் பகுதி 2

ஆர்.ஜே.பாலாஜி - JioSaavn இணைந்து வழங்கும் மைண்ட் வாய்ஸ் பாட்காஸ்ட் புதிய பகுதியில், நேயர்களுக்குத் தரப்படும் தவறான தகவல்கள் மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியன குறித்து பல சுவையான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன....

நடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார்  நடிகர் ஆரி*

  *அம்மன்யா மூவிஸின் புரடக்ஷன் நெ.1 படத்தின் படப்பிடிப்பு  இன்று பூஜையுடன் இனிதே டி.ஆர் கார்டனில் துவங்கியது* நடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்தின்  பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணிக்கு டி...

MOST POPULAR

HOT NEWS