இது குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது….
முதலில் பல்துறைகளிலும் என் வேலைகள் அனைத்தையும் கவனித்து, பாராட்டி ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நடிப்பு, இயக்கம், நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குதல் என எந்த வேலையையும் நான் நல்லபடி செய்ததற்கு நீங்கள் அளித்த ஆதரவே காரணம். சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி மூலம் பலர் உந்தப்பட்டு தங்கள் வாழ்வில் தெளிவடைந்ததை கூறும்போது அது பெரு மகிழ்ச்சி அளிக்கும். பலரும் என்னை நேரிலும் இணையம் வழியும் தங்கள் பிரச்சனைகளை என்னை உறவாய் நினைத்து கூறுவதும், தீர்வு கேட்பதும் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஊக்கத்தினால் நான் தற்போது எனது நான்காவது படைப்பான ஹவுஸ் ஓனர் படத்திற்கு பிறகு “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க உள்ளேன். இது முற்றிலும் நம் வாழ்வியலை மேம்படுத்தும், மதிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும். இந்நிகழ்ச்சி என்னை சந்தோஷப்படுத்தும் அதே நேரத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவரின் வாழ்வை மாற்றக்கூடியதாக இருக்கும் என தீவிரமாக நம்புகிறேன். இந்நிகழ்ச்சி பார்க்கும் உங்களையும் ஒரு மாற்றத்திற்குள் ஈர்த்து மகிழ்விக்கும். இந்நிகழ்ச்சியை சமுதாயத்திற்கு என் வழியில் நான் செய்யும் நன்றிக்கடனாக நினைக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவையும் எப்போதும் போல் அளிக்க வேண்டுகிறேன்.