திரைப்படத் தொழில் என்பது செழிப்பாக இருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் எடுக்கும் திரைப்படங்கள் வெற்றி அடைந்து, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும். தங்கப் புதையல் வேட்டையைப்போல், ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் இந்த வெற்றியை நோக்கியே தங்கள் தயாரிப்பைத் தொடர்கின்றன.
தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தொடர்ந்து தரும் வெற்றிகள் மூலம் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தை கவனிக்க வைத்திருக்கிறார்.
திருட்டு விசிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் திரையரங்கில் படம் ஓடும் காலத்தை குறைக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த ‘கோமாளி’ திரைப்படம், 80 நாட்களைக் கடந்து இன்னமும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு முறை ஓளிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உரிமைகளைத் தாண்டி இந்த வெற்றியை கோமாளி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வருண் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியான இந்நிறுவனத் தயாரிப்பான ‘பப்பி’ என்ற படம் இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவரும் படமாக வெற்றி நடை போடுகிறது. ‘பப்பி’ வெளியாகி 25 நாட்கள் கடந்தும் இன்னும் கணிசமாக இருக்கைகள் நிரம்பிய அளவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கெளதம் வாசுவேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படம் மிக நீண்ட காத்திருப்புக்குப் பின் இப்போது இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வேல்ஸ் பிலிம் intetnational நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வமாக வந்தது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவை அனைத்துக்கும் மேலாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருப்பது, இமைபோல் காக்க என்ற டேக் லைனுடன் வரும் ‘ஜோஷ்வா’ திரைப்படம்.
வருண் நடிக்கும் இப்படம் கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
திரைப்படங்கள் மீது தீவிர வேட்கை கொண்டிருப்பதால்தான் டாக்டர் ஐசரி .கே. கணேஷ் மற்றும் அவரது படநிறுவனத்தால் இப்படி தொடர் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பது நிதர்சனம்.