spot_img
HomeNewsட்ரிப்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

ட்ரிப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

                    மிகச்சரியான திட்டமிடலும் துல்லியமான கணிப்புகளும் இருந்தால் நினைத்தபடி  படப்பிடிப்பை நடத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும்  ‘ட்ரிப்’ திரைப்படம். கடந்த நவம்பர் மாதம் தலைக்கோணாவில் தொடங்கிய படப்பிடிப்பு, 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.


இது குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொண்ட இயக்குநர் டெனிஸ், “முதல் கட்ட படப்பிடிப்பின்போது பலத்த மழை, வெள்ளப் பெருக்கு என்று பல கடுமையான சவால்களை எதிர்கொண்டோம். ஆயினும் எந்தவித சமரசமும் இல்லாமல், நாங்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்” என்றவர், படப்பிடிப்பிடிப்பு நடக்கையில் புலி ஒன்றை எதிர்கொண்ட மறக்க முடியாத அனுபவத்தையும் விவரித்தார்.
“படப்பிடிப்பு நடக்கும்போது நாங்கள் சற்றும் எதிர்பாராமல் திடீரென புலி ஒன்று வந்துவிட்டதைக் கண்டுஅதிர்ச்சியடைந்தோம். ஆயினும் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. தடைகளின்றி படப்பிடிப்பை பாதுகாப்பாக நடத்த உதவிய உள்ளூர்வாசிகளுக்கும், வன இலாக்கா அதிகாரிகளுக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். இவர்களது ஆதரவும், நடிக நடிகையரின் அர்பணிப்பு மிக்க ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருக்க இயலாது. படப்பிடிப்பில் இத்தகைய சவால்கள் இருந்தாலும், யோகி பாபு மற்றும் கருணாகரன் இருவரது கலகலப்பான பேச்சும் செயல்களும், பணியின் சுமையைக் குறைத்து சுகமானதாக மாற்றியது. படத்தில் இவர்கள் வரும் பகுதி ரசிகர்களால் வெகுவாக வரவேற்கப்படும் என நம்புகிறேன்.

பிரவீண் மிகச் சிறப்பாக நடித்திருப்பதுடன் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் துணிச்சலுடன் பணியாற்றியிருக்கிறார். ட்ரிப் திரைப்படம் சுனைனாவுக்கு நிச்சயமாக ஒரு திருப்பு முனையாக அமையும். படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் அவர் புன்னகை மாறாமல் அனைவருடனும் அளவளாவினார். அவரது அர்பணிப்பும் மிகச் சிறந்த நடிப்பும் பல புதிய படவாய்ப்புகளைப் பெற்றுத் தரும். வி.ஜெ.ராகேஷ், அதுல்யா சந்திரா, லட்சுமிப்ரியா, கல்லூரி வினோத், விஜே.சித்து, ஜெனிஃபர், மற்றும் ராஜேஷ் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்” என்றார்.

நவம்பர் இறுதியில் தலக்கோணா மற்றும் கொடைக்கானலில் முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படப்புகழ் சித்து குமார் இசையமைக்க, உதய சங்கர் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img