இசை, நடனம், நடிப்பு என எதுவாக இருந்தாலும் தனது திறமை மூலம் ஆச்சர்யம் தருபவர் தான் ஸ்ருதிஹாசன். பன்முக திறமைகள் வாய்ந்த ஸ்ருதிஹாசன் எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் மிக எளிதாக கையாள்பவர். ஆனால் அவருக்காவே உருவாக்கப்பட்டது போன்ற பொருத்தமான கதாப்பாத்திரம் தான் ஃப்ரோஷன் படத்தின் எல்ஷா பாத்திரம். ஃப்ரோஷன் 2 படத்தின் தமிழ் பதிப்பில் இளவரசி எல்ஷா பாத்திரத்திற்கு ஸ்ருதிஹாசன் டப்பிங் செய்துள்ளார். இளவரசி எல்ஷா வின் கதாபாத்திரத்தை தன் குரல் மூலம் உயிரூட்டி தமிழ் ரசிகர்களுக்கு கண்முன் கொண்டு வந்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன் ஏன் இந்தக்கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர்…
1)தமிழ் சினிமாவின் சரித்திர நாயகன் கமலின் மகள் ஸ்ருதி. அவர் நிஜ வாழ்விலும் இளவரசி போன்றவரே.
சினிமா மீதான காதலும் நேர்த்தியும் இயல்பாகவே தன்னுள் கொண்டவர் ஸ்ருதி. அவர் அப்படித்தான் இருக்க முடியும் ஏனெனில் இந்தியாவின் மிகச்சிறந்த திரை ஆளுமையாளரான கமலின் மகள் அவர். ஒரு கதாப்பாத்திரத்தை கையாள அவருக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. அதிலும் அவரின் இயல்போடு ஒத்துப்போகும் இளவரசி எல்ஷாவின் பாத்திரத்தை அவர் வெகு எளிதாகவும் பிரமாதமாகவும் கையாள்வார் என நம்பலாம்.
2)மிகவும் தைரியமிக்கவர். எதற்கும் அஞ்சாதவர் ஸ்ருதி
உள்ளதை உள்ளபடி பேசும் தைரியம் கொண்ட நடிகை ஸ்ருதி. அவர் நிஜ வாழ்விலும் புதுமைப்பெண்ணாக சவால்களை விரும்புபவர். எல்ஷாவின் திரைப்பாத்திரத்தை நிஜ வாழ்விலும் எதிர்கொள்பவர் ஸ்ருதி எனும் போது அவர் திரையில் அக்கதாப்பாத்திரத்தை வெகு அற்புதமாக உயிரூட்டுவார்.
3)ஸ்ருதி இயல்பில் புதுமைகளை விரும்புபவர். தன் வாழ்வை தீர்மாணிக்கும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்.
எல்ஷாவும் ஸ்ருதியும் ஒரு வகையில் ஒரே மாதிரியான இயல்பை கொண்டவர்கள். சுதந்திரத்தை, தங்களது லட்சியதை தேர்ந்தெடுத்து பயணிப்பவர்கள். சரியென்று தீர்மானித்தவற்றை போராடி வெல்லும் குணமுடையவர்கள். திரையில் எல்ஷாவின் பாத்திரத்தை பிரதிபலிக்கும் அவர் நிஜத்தில் வெளியில் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.
4)எல்ஷா போன்றவரே ஸ்ருதி. வெற்றியை அடையும் சூத்திரம் அறிந்தவர்.
ஸ்ருதி நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். இசையமைப்பார், பாடுவார், நடிப்பார், பின்னணி பேசுவார். தான் செய்வதில்
நேர்த்தியை காட்டி அதைக்கற்றுக்கொண்டு, சரியான முடிவெடுத்து வென்று காட்டுபவர். எல்ஷா இளவரசி பிரச்சனைகளில் சிக்கினாலும் சரியாக அணுகி தீர்வு காணும் போராளி. நிஜத்தில் ஸ்ருதியும் அப்படியே. இருவரும் தங்களை பற்றி அறிந்து செயலாற்றுபவர்கள்.
5)ஸ்ருதியை விட திடமாகவும் தைரியமிக்க போராளி பெண்ணாகவும் நடிக்க கூடியவர் யாருமில்லை.
இயல்பில் அறிவில் சிறந்தவர் ஸ்ருதி. எந்த ஒரு விசயத்திலும் அவரின் முடிவுகள் சரியாக இருக்கும். எந்த ஒரு இடர்பாடுகளிலும் அவர் நம் பக்கம் இருந்தால் வெற்றி உறுதி. எல்ஷா ஓர் இளவரசி என்றாலும் அவர் போராடும் வீராங்கனை எந்தப் போரிலும் சரியான திட்டமிடலுடன் ஜெயிக்கும் வல்லமை படைத்தவர் எல்ஷா. இந்த இருவரும் ஒன்றாக இணைந்து நம்மை மகிழ்விக்க வருகிறார்கள்.
ஃப்ரோஷன் 2 தமிழ் மொழியில் நம் ரசிகர்களுக்கென்றே பிரத்யேகமாக மிகுந்த நேர்த்தியுடன் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. பல ஆச்சர்யங்கள் நிறைந்த சாகசப்பயணம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. நவம்பர் 22 முதல் டிஸ்னி யின் ஃப்ரோஷன் 2 வை திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம்.