பெண் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்தான்‘கே.டி (எ) கருப்பு துரை’ இயக்குநர் மதுமிதா, ஒரு வயதானவரையும், ஒரு சிறுவனையும், வைத்துக் கொண்டு, செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை என இரண்டையுமே எதார்த்தமாக கையாண்டிருப்பதோடு, வாழ்க்கையின் மறுபக்கத்தை ரொம்ப சாதாரணமாக விளக்குவது தான் ‘கே.டி (எ) கருப்பு துரை’ படத்தின் கதை.ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்தவர் கருப்புதுரை. அவருக்கு உடல் நிலை பாதிக்கப்படும் போது, பெற்ற பிள்ளைகள் ஒன்று கூடி அப்பாவை கருணை கொலை செய்து விட முடிவு செய்கிறார்கள். இது தெரிந்து, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளி யேறும் கருப்புதுரை, கோவில் ஒன்றில் தஞ்சம் அடைய, அதே கோவிலில் வளரும் ஆதரவற்ற சிறுவனான குட்டியின் நட்பு கிடைக்கிறது ஆதவற்ற சிறுவனான குட்டி வாழ்க்கையை புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு கூட, ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த கருப்பு துரை புரிந்து வைத்திருக்கவில்லை. குட்டியுடன் பழகிய பிறகு அதை புரிந்துகொள்ளும் அவர், தனது வாழ்க்கையை மீண்டும் வாழ தொடங்குகிறார். . இருவரும் சேர்ந்து பயணிக்க, இருவருக்கும் இடையிலான உறவு பாசமிகுந்ததாக மாற, ஒரு கட்டத்தில், குட்டியும், கருப்பு துரையும் பிரிய வேண்டிய சூழல் ஏற்படும் போது, அவர்கள் அதை எவ்வாறு எதிர் கொள்கிறார்கள், என்பது தான் படத்தின் மீதிக்கதை.எழுத்தாளர் மு.ராமசாமி கருப்பு துரை கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கோமாவில் இருந்து திடீரென்று கண் விழித்து எழுந்துக்கொள்வதில் வெளிப்படுத்தும் அசத்தலான நடிப்பை, பிரியாணி சாப்பிடுவது, மது குடிப்பது, பள்ளிபருவ காதலியை சந்திப்பது என அனைத்துக் காட்சிகளிலும் அள்ளி வீசுகிறார் குட்டி என்ற கேரக்டரில் வரும் நாகவிஷால், பார்ப்பதற்கும் குட்டியாக இருந்தாலும் நடிப்பில் அபாரம்.எந்த வித உறவுமுல்லாமல் ஒரு சூழலில் இணைந்த ஒரு தாத்வையுதாம், ஒரு சிறுவனையும் கோர்த்து நாட்டு நடப்பு, சென்டிமெண்ட் ஆகியவற்றுடன் நகைச்சுவையையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்திருகிறார் இயக்குநர் மதுமிதா இதற்கு முன்பு இயக்கிய திரைப்படங்களுக்கும், இந்த படத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் . இருந்தாலும் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பு இன்றி, , ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குநர் மதுமிதா,
Cast: Mu. Ramasamy as KD (Karuppu Durai), Nagavishal as Kutty
Written & Directed by : Madhumita
Dialogues & Additional Screenplay : Sabarivaasan Shanmugam
DOP : Meyyendiran Kempuraj
Producers : Vikram Mehra, Siddharth Anand Kumar
Executive Producers : Gaurav Sharma, Sahil Sharma, Shoaib Lokhandwala, Nitin Nair
Editor : Vijay Venkataramanan
Music : Karthikeya Murthy
Lyrics : Sabarivaasan Shanmugam, Karthikeya Murthy
Costume Designer : Muruganantham R
Sound Designer : Subash Sahoo
Sound Mixing : Subir Das
DI Colorist : Prashant Sharma
Publicity Designs : Sivakumar S (SIVADIGITALART)
PRO : Nikil Murukan
Production Designer : Immanuel Jackson
Line Producers : Abhishake Jha, Paritosh Soni