Monday, October 2, 2023
Home 2019 December

Monthly Archives: December 2019

தளபதி விஜய் நடிப்பில்  சேவியர் பிரிட்டோ தயாரிப்பில்  லோகேஷ் கனகராஜ் இயக்கும்  ‘மாஸ்டர் ‘

தளபதி 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு "மாஸ்டர்" என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது  .இந்தப் படத்தை மாநகரம் ,கைதி படங்களை இயக்கிய லோகேஷ்...

புத்தாண்டு புதுவரவாக கலர்ஸ் தமிழில், ’உயிரே’ நெடுந்தொடர்.

உயிரே!புத்தாண்டு புதுவரவாக கலர்ஸ் தமிழில்,  வரும் ஜனவரி 2ம் தேதியிலிருந்து திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது ’உயிரே’ நெடுந்தொடர். தன் தாயின் அரசியல் ஆசையால் தன் காதலனைப் பறிகொடுத்துவிட்டு சந்தர்ப்பவசத்தால் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தன் வாழ்வில் நடக்கும் போராட்டங்களை எப்படி கடந்துவருகிறாள் என்பதே கதை. அரசியல் வேட்கையால் நேரெதிர் துருவத்தில் நிற்கும் தாய், தாய்ச் சொல்லைத் தட்டாத  மூன்று சகோதரர்கள், இவர்களுக்கு நடுவில் தற்போது உயிரோடு இல்லாத தன் தந்தையின் சொல்லே வேதவாக்கு என நினைத்து நேர்மையான வழியில் போராடத் துடிக்கும் இளம்பெண்ணாக வலம் வருகிறாள் பவித்ரா. சிவில் சர்வீஸ் தேர்வெழுதிவிட்டு நேர்முகத் தேர்வுக்காக காத்திருக்கும் இளைஞன் வருணை பவித்ரா காதலிக்க,தன் தகுதிக்கு குறைச்சல் என கருதி வருணை கொன்றுவிட்டு வேளாண்துறை அமைச்சராகவும் மனைவியை இழந்துவிட்டு 5 வயது குழந்தைக்குத் தகப்பனாகவும்  இருக்கும் செழியனுடன் பவித்ராவை கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார் பவித்ராவின் தாய் வீரலட்சுமி. தனக்கெதிராக தன் தாய் செய்த துரோகம், தன் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்கொண்டு நேர்மையான வழியில் போராடுகிறாள் பவித்ரா. மதுரையைக் கதைக்களமாக கொண்ட இக்கதை குடும்ப உறவுகளையும், சமூகப் பிரச்சனைகளையும் ஒரு பெண் துணிச்சலாகக் கையாள்வதைக் குறித்துப் பேசுகிறது. வித்தியாசமான கதைக்களங்களால் தங்கள் சீரியல்களில் புதுமை படைக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் இந்த புதிய தொடர் குடும்பம் சமூகம் என இருவேறு களங்களிலும் ஒரு பெண் நடத்தும் போராட்டத்தை வித்தியாசமான வகையில் வெளிப்படுத்துகிறது. இதற்கு முன்பாக கலர்ஸ் ஹிந்தியில் வெளிவந்த ஹிட் தொடரான ‘சோட்டி ஸர்தார்னி’ யின் ரீமேக் வடிவமாகவே தற்போது தமிழில் வெளிவருகிறது இந்த ‘உயிரே’ தொடர். தொடரின் நாயகியான பவித்ராவாக மனிஷா ஜித்தும் , நாயகன் செழியனாக வீரேந்திர சௌத்ரியும், பவித்ராவின் தாய் வீரலட்சுமியாக சோனா நாயரும் நடிக்கிறார்கள். தொடர்  குறித்து, கலர்ஸ் தமிழின்  வர்த்தகத் தலைவரான அனுப் சந்திரசேகரன் கூறுகையில், `எங்கள் சேனலில் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சிகளையே வழங்கி வருகிறோம்.எங்கள்  சீரியல்களிலும் பெண்கள் துணிச்சலாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்வதாகவே கதையை வடிவமைத்திருக்கிறோம். அதன்படி ‘உயிரே’ தொடர் துணிச்சலான ஒரு பெண்ணின் கதையை உங்கள்...

Bommai Movie Poster

2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S 

2019-ஆம்  ஆண்டு தமிழ்த்திரையுலகில்  அதிகப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம்.சி.எஸ். பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் ஓர் இசை அமைப்பாளர் அவர். ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சிமொழியும்...

Third Eye Entertainment சார்பில் தயாராகும் “Production No.1” படப்பிடிப்பை முடித்த இயகுநர் ரஞ்சித் ஜெயக்கொடி ! 

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி Third Eye Entertainment சார்பில் தயாராகும் பெயரிடப்படாத “Production No.1” படத்தின் படப்பிடிப்பை மிக விரைவாக முடித்திருக்கிறார். தனது தொழிலில் வித்தகராக இருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பருவ...

நடிகர் ஆரி தனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளார்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை  பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான், அதை நான் என்றும் மறவேன். இந்த புத்தாண்டு முதல் எனது...

சிபிராஜ்ஜின் “வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி !

 இந்திய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களாக கொண்டாடப்படுபவர்களில் ஒருவராக இருக்கும் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் தனது நடிப்பாலும் புகழை குவித்து வருகிறார். “சதுரங்க வேட்டை” தொடங்கி வித்தியாசமான வேடங்களில் தனது சிறந்த நடிப்பை...

தமிழரசன் ” படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் பாடல்!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர்,  ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.. ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர் இசை  -   இளையராஜா பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம் கலை  -   மிலன் ஸ்டண்ட்  -   அனல் அரசு எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர் நடனம்   -      பிருந்தா சதீஷ் தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர் கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன் தயாரிப்பு  -    கெளசல்யா ராணி படம்ன பற்றி இயக்குனர்  பாபு யோகேஸ்வரன். .. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்ஆண்டனி சூழ்நிலை காரணமாக  ஒரு போராளியாக மாறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்காக   S.P.B  ஒரு பாடலையும்,  12 வருடங்களுக்கு  பிறகு இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் 2020 ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் படத்தின் இயக்குனர் பாபு யோகேஷ்வரன். படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

தர்பார் ” பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது .

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்  “தர்பார்” .  2.0 எனும் பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்துடன் இரண்டாவது முறையாக இணைந்து இப்படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம்...

தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது. ஆளுநர் புகழாரம்

தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியத்தைக் கொண்டது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டியிருக்கிறார். பிரிட்ஜ் அகாடமி ஊடக கல்வி மற்றும் நுண்கலை கல்லூரியின் சார்பாக சென்னையில் பிரிட்ஜ் தேசிய...

MOST POPULAR

HOT NEWS