சந்தானம் கதாதாயகனாக நடிக்க அவருடன் முதன் முதலில் யோகிபாபு இணைய, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட வினியோகஸ்தருமான, எஸ்.பி.செளத்ரி தமது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் படம்தான் ” டகால்டி ”
சென்னை, திருக்கழுகுன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனோ, ஜெய்ப்பூர் என நான்கு மாநிலங்களில் வளர்ந்துள்ளது ” டகால்டி ”
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் ரஜினியின் “தர்பார்” படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலும் அமர்க்களமாக வளர்ந்துள்ள படம் தான் “டகால்டி ”
சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி திரை உலகின் முன்னணி நட்சத்திரமான ரித்திகா சென் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், மற்றும் யோகி பாபு, ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி இந்திப் பட உலகின் பிரபலமான நடிகர் தருண் அரோரா ஆகியோருடன் வெளிநாடுகளிலிருந்து வந்த மாடல் அழகிகளும் பங்கு பெற்ற படம் தான் ” டகால்டி ”
சந்தானத்துடன் முதன் முறையாக யோகி பாபு சேர்ந்து நடிப்பதால் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எகிறி உள்ளது.
விஜயநாராயணன் இசையையும், கார்கி பாடல்களையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஜாக்கி கலையையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத்தயாரிப்பையும், கவனித்துள்ளனர்.
ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம் தான் ” டகால்டி ”
டிசம்பரில் குடும்பங்களை குதூகலிக்க வருகிறது “டகால்டி “