spot_img
HomeNewsநான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு

நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு

வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு
தயாரிப்பாளர் வெங்கட் பேசியதாவது,

“தண்டுபாளையம் ஒரு எக்ஸைட்மெண்டா இருக்குற புரோக்ராமா இருக்கு. பெரியவங்க எல்லாம் வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தண்டுபாளையம் ஒரு சென்ஷேனல் பெயர். தண்டுபாளையம் ஒரு க்ரைம் ஹிஸ்டர். ஏசியாவிலே இது இரண்டாவது க்ரைம். எந்த போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டும் கண்டு பிடிக்க முடியல. இதில் முக்கியமான விசயம் என்னன்னா எத்தனையோ க்ரைம் படம் பார்த்திருப்பீங்க. நிச்சயமாக நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன். இதுபோல் ஒரு படத்தை க்ரைம் படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு டிபரெண்டான எக்ஸ்பீரியன்ஸ் இந்தப்படத்தில் இருக்கும். இப்படம் பார்த்து முடித்து வெளில வரும்போது ஒரு டென்சன் மனதில் இருக்கும். க்ரைம் பண்றவங்களை நிச்சயம் தண்டிக்கணும். அதே நேரம் நாமும் பாதுகாப்பாக இருக்கணும். இந்த கண்டெண்ட் தான் இந்தப்படம். சுமன் ரங்கநாத் மேடத்திற்கு தான் முதல் நன்றி சொல்லணும். கர்நாடகால உள்ள வெயில்ல தயங்காம நல்லா டெடிகேஷனா நடிச்சாங்க. அவங்களுக்கு நன்றி. இசை இயக்கம் இரண்டுமே படத்தில் சிறப்பா இருக்கும்” என்றார்

படத்தை வெளியிடும் பாலாஜி பேசியதாவது,

“இந்தப்படத்தை ரொம்ப அற்புதமா எடுத்திருக்காங்க. இது கொடூரமான படம்னு நிறைய பேர் சொல்றாங்க. ஆனால் கொடூரமானவங்களிடம் இருந்து நான் எப்படி தப்பிக்கணும் என்பதைச் சொல்லும் படம் இது” என்றார்

பாடலாசிரியர் சொற்கோ பேசியதாவது,

“ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி இது. இந்தப்புவனமே திரும்பி பார்க்கும் வகையில் உள்ளவர் எங்கள் pro புவன். இந்தப்படத்தின் கதாநாயகி மிக கம்பீரமான தோற்றத்தோடு இருக்கிறார். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். படமெங்கும் ரத்தக்கறையாக இருந்தாலும் இந்தப்படம் ஒரு செய்தியைச் சொல்கிறது. நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்தப்படம் மதில்மேல் பூனை மாதிரி. ஒரே நேரத்தில் இருபது ட்யூன் போடுபவர் தான் இசை அமைப்பாளர். உடனுக்குடன் எழுதுபவர் தான் சிறந்த பாடலாசிரியர்” என்றார்

நடிகர் அபி சரவணன் பேசியதாவது,

“வெங்கட் சார் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும். ஹீரோயின் சுமன் ரங்கநாத் மேடம் பற்றி இப்பதான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன். அவங்க தான் மாநகரகாவல் படத்தில் நடித்துள்ளாராம். பக்கத்து மாநிலத்து நடிகையான அவர் எவ்வளவு அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். ஆனால் நம்மூர் நடிகைக்கு ஏன் இந்த எண்ணம் வர மாட்டேங்குதுன்னு தெரியல. ரெண்டு நாளைக்கு முன்னாடி மீராமிதுன் பாக்கியராஜ் சார் முன்னாடி கால்மேல் கால்போட்டு இருந்தார். நம் பண்பாடு கலாச்சாரம்லாம் என்ன”? என்ற கேள்வியோட முடித்தார்

இயக்குநர் மற்றும் நடிகர் தருண்கோபி பேசியதாவது,

“இந்தப்படத்தின் ட்ரைலர் பார்க்கும் போது எனக்கு ஒரு கான்பிடண்ட் வந்தது. திமிரு படத்தில் ஸ்ரேயாரெட்டி கேரக்டர் மாதிரி சுமன் ரங்கநாத் கேரக்டர் செம்ம போல்டாக இருக்கிறது. நிச்சயமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அடையும். இந்தப்படத்தில் சினிமாட்டிக் இல்லை ஒரு லைவ் இருக்கு. இந்தப்படத்தின் வெற்றி தயாரிப்பாளர் வெங்கட் அவர்களுக்கு முழுமையாகப் போய்ச்சேரும்” என்றார்

நடிகை சுமன் ரங்கநாத் பேசியதாவது,

“என்னோட முதல்படம் புதுப்பாட்டு. சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்குள்ள சாப்பாடு, இங்குள்ள கலாச்சாரம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பா இங்குள்ள படங்கள் எல்லாம் பார்ப்பாங்க. இந்தப்படத்தில் நடிக்க கேட்டதும் உடனே சம்பதித்தேன். ஏன்னா இந்தக்கேரக்டர் ரொம்ப சேலன்ச்சிங்காக இருந்தது. எனக்கு வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. எனக்கு ஒரு விஷன் இருக்கு. எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு நன்றி. எனக்கு சினிமாவை ரொம்ப பிடிக்கும். என் கேரக்டர்களை நான் காதலிப்பேன். இந்தப்படம் எனக்கு மிகச்சிறப்பான அனுபவம். ரொம்ப கஷ்டமான லொக்கேஷனில் படம் எடுத்தோம்..முள், வெயில் எல்லாம் சோதித்தாலும் எங்கள் வேலைகளை சரியாகச் செய்துள்ளோம். இந்தப்படத்தில் இசை ரொம்ப நல்லாருக்கு. இயக்குநர் நாயக் சாருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் தமிழில் வெளிவருவது ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img