சாட்டை முழுவதும் பள்ளியை மையப்படுத்திய கதை என்றால், அடுத்த சாட்டை அப்படியே கல்லூரியில் நடப்பது போன்ற கதை.
கல்லூரியில் முதல்வராக தம்பிராமையாவும், பேராசிரியராக சமுத்திரகனியும் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மட்டும் முன்னுரிமை தரப்பட்டு வரும் அந்த கல்லூரியின் தவறுகளை சமுத்திரகனி சுட்டி காட்டி வருகிறார். மாணவர்களுக்கிடையே ஜாதிகள் ஏதும் கிடையாது என்று கூறி மாணவர்களை ஒழுங்குப்படுத்தி வருகிறார் சமுத்திரகனி. மாணவர்களுக்கிடையே இருக்கும் பிளவுகளையும் நீக்குகிறார்.சமுத்திரகனியின் செயலால் கோபமடையும் தம்பிராமையா, அவரை எப்படியாவது கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இறுதியில் சமுத்திரகனி, தம்பிராமையாவின் சூழ்ச்சியில் இருந்து எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் அன்பழகன் சாட்டை படத்தின் தன் கருத்துகளை பள்ளியில் இருந்து தற்போது கல்லூரிக்கு கடத்தி இருக்கிறார். சமூகத்தில் சாதி ஏற்றதாழ்வுகளை மாணவர்களிடம் கடத்த கூடாது என்கிற அவருடைய எண்ணம் வரவேற்கத்தக்கது. இத்தகைய பிரச்சாரத்தை தன் படைப்புவழியாக மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறார்.
சமுத்திரக்கனி – படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை எதாவது அறிவுரை கூறிக்கொண்டே இருக்கிறார். சாட்டை படத்தில் மற்ற கதாபாத்திரங்களிடம் பேசி அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருந்த சமுத்திரக்கனி, ஒரு பக்கம் பேராசிரியர்கள், மறுபக்கம் மாணவர்கள், என்று இரு தரப்பினரிடையும் இருக்கும் குறைகளை சரி செய்வதையே தனது பணியாகக் கொண்டு செயல்படும் சமுத்திரக்கனியை சுற்றி முழு படமும் நகர்வதால், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை திரை முழுவதும் நிரம்பியிருக்கிறார்.கல்லூரியின் தலைமை ஆசிரியராக, வில்லத்தனம் கலந்த நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையாவின் வில்லத்தனத்தில் இருக்கும் மிரட்டலும், காமெடிக் காட்சிகளில் நடிப்பில் பின்னியுள்ளார். தம்பி ராமையாவின் மகனாக நடித்திருக்கும் யுவன், அவர் காதலிக்கும் சக மாணவியான அதுல்யா ரவி, ஸ்ரீராம், ஜார்ஜ் மரியன் என்று அனைவரும் தங்களது வேடத்தில் திறம்பட நடித்திருக்கிறார்கள்.படத்தில் எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சம் இல்லாமல்படத்தை நகர்த்திச் செல்வது மிகக் கடினம்அதையும் மீறி இயக்குனர்
அடுத்த சாட்டை படமல்ல — பாடம் –