ஜி.வி.பிரகாஷ் குமார், ராதா கிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சிராஜ், தற்போது ‘கணபதி ஐயர்’ என்ற நகைச்சுவை குறும்படம் ஒன்றை எழுதி இயக்கியிருக்கிறார்.
‘கணபதி ஐயர்’ குறும்படம் குறித்து இயக்குநர் சிராஜ் தெரிவித்ததாவது…
“சந்தர்ப்பம் என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் அமையாது. அப்படியே அமைந்தாலும் அதை எல்லோராலும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இதை மையக் கருத்தாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம்தான் கணபதி ஐயர். கணபதி என்ற பெயர் ஒற்றுமை கொண்ட இரண்டு நபர்களிடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. யு டியூப் விமர்சகராகப் புகழ் பெற்ற It is பிரசாந்தும், ராஜா ராணி படத்தில் பூஷன் வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவரும், தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்திருப்பவருமான டி.எம்.கார்த்திக்கும் கணபதி என்ற பெயர் கொண்ட அந்த முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
பிரதான வேடங்களில் it is பிரசாந்த் மற்றும் டி.எம்.கார்த்திக் நடிக்க, சத்யா, மாஸ்டர் ஹரிஹரசுதன், வினோத், அர்ஸாத், சாத்து, கோகுல், பாலாஜி, கர்ணராஜா, ஹரிஹரன், ஜெகதீசன், அரவிந்த் ஜானகிராமன், மணி, லவ்லி ஆனந்த், கார்த்திக் குப்புசாமி மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்” என்றார்.
ராஜ் கே.சோழன் இசையமைக்கும் இந்தக் குறும்படத்துக்கு அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெங்கட் ராஜ் படத்தொகுப்பை கவனிக்க, ஏ.ஜெயகுமார் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். கலரிஸ்ட் பொறுப்பை நந்த குமாரும், பைனல் மிக்ஸிங் பொறுப்பை சதீஷும். டப்பிங் இன்ஜினியர் பொறுப்பை ஹரியும் ஏற்றிருக்கின்றனர். கார்த்திக் குப்புசாமி மற்றும் அனீஸ் இருவரும் கோ இயக்குநர்களாகப் பொறுப்பேற்க, பிரவீண் ஜெரி இணை இயக்குநராகவும், ஹென்றி பிரசன்னா, பாலாஜி மற்றும் செபாஸ்டின் உதவி இயக்குநர்களாகவும் கணபதி ஐயர் குறுப்படத்தில் பணியாற்றியிருக்கின்றனர்.