spot_img
HomeNewsஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்

ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்

ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம். சரேகமா, டைம்ஸ் மியூஸிக், சோனி மியூசிக், டி சீரிஸ், யூனிவர்ஸல் மியூசிக்,  வீனஸ் உள்ளிட்ட 340க்கும் அதிகமான இசை நிறுவனங்களின் 30 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பாடல்களை, பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப / ஒலிப்பதிவு உரிமையையும், வானொலி ஒலிபரப்பு உரிமையையும்,  அதற்கான கட்டணத்தை வசூலிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது.

ஒவ்வொரு வருடமும், திரைத்துறை மட்டும் நூற்றுக்கணக்கான பாடல்களைத் தயாரிக்கிறது. அதில் பல பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலைக்கிறது. இன்று இந்திய இசை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால் அவர்களின் அறிவுசார் சொத்துக்கு ரசிகர்கள் இல்லை என்பது கிடையாது. அந்த சவால்,  பெரும்பாலான இந்தியர்களுக்கு தாங்கள் ரசிக்கும் இசைக்கான பணத்தைத் தர வேண்டும் என்றோ அல்லது அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான்.  இந்த துரதிர்ஷ்டவசமான உண்மைதான் உணவகங்கள், பார்கள், பொது நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள், கஃபேக்கள் எனப் பல இடங்களில் பிரதிபலிக்கிறது. இவர்கள் PPL அமைப்பிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் இசையை ஒலிக்கச் செய்து தொடர்ந்து அறிவுசார் சொத்துரிமை சட்டங்களை மீறி வருகின்றனர்.

காப்புரிமை சட்டம் 1957ன் படி, பொது நிகழ்ச்சிகளில் ஒரு பாடலை பயன்படுத்தும் முன், காப்பரேட் நிறுவனமோ அல்லது தனிநபரோ, அந்த இசையின் காப்புரிமை பெற்றவர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் ஒவ்வொரு இசை நிறுவனங்களையும் தனித்தனியாக அணுகுவதற்குப் பதிலாக இந்த உரிமையைத் துரிதமாகப் பெறும் வழி PPL அமைப்பிடமிருந்து உரிமை பெறுவதே. ஏனென்றால் PPL நிறுவனம் இசை நிறுவனங்களிடமிருந்து பிரத்தியேக உரிமத்தைப் பெற்றுள்ளது.

காப்புரிமை பெறப்பட்ட பாடல்களுக்கான உரிமத்தை வழங்கக் காப்புரிமை சட்டம் பிபிஎல் அமைப்பு அனுமதி அளித்துள்ளது.  PPL அமைப்பு பெரும்பாலான தமிழ், இந்தி மற்றும் பிராந்திய மொழிப் பாடல்களின் உரிமைகளைப் பெற்றுள்ளது. பல சர்வதேச இசை நிறுவனங்களின் பாடல்களுக்கான பொது நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி ஒலிபரப்பு உரிமையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. உரிய அனுமதி பெற வேண்டும் என்று PPL அமைப்பு அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறது. காப்புரிமை சட்டம் 1957 பிரிவு 51 மற்றும் 63ன் கீழ் எந்த குற்றமாக இருந்தாலும் அது சட்டவிரோதம் மற்றும் தண்டனைக்குரியது.

PPL பற்றி

PPL இந்தியா நிறுவனம் சர்வதேச அளவில் IFPI (International Federation of Phonographic Industries) கூட்டமைப்புடன் இணைந்துள்ளது. பெரும்பான்மையான இந்திய மற்றும் சர்வதேச இசை நிறுவனங்களின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது. இந்த இசை நிறுவனங்களின் பாடல்களை பொது நிகழ்ச்சிகளில் பாட / ஒலிபரப்ப, வானொலியில் ஒலிபரப்பத் தேவையான உரிமையையும், அதற்கான தொகையை வசூல் செய்யும் உரிமையையும் பிபில் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.  340 இசை நிறுவனங்களின் 30 லட்சத்துக்கும் அதிகமான பாடல்களுக்கு பிபிஎல் பிரதிநிதியாகச் செயல்படுகிறது. இதைப் பயன்படுத்துபவர்களுக்கான உரிமையைத் தொழில்முறையில் வெளிப்படையாகச் செய்து வருகிறது. சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த வழிமுறைகளை பிபிஎல் கடைப்பிடித்து வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பாடல் உரிமத்துக்கான எல்லையை விரிவாக்குவதன் மூலம் தனது உறுப்பினர்களின் மதிப்பைக் கூட்டுவதில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

நீதிமன்றத்தில் வாங்கப்பட்டுள்ள உத்தரவின் விபரம்:

மதிப்பிற்குரிய சென்னை உயர் நீதிமன்றம் 19 டிசம்பர் 2019 அன்றும் (OA 1116\19 and OA 1117\19) மற்றும் மும்பை உயர் நீதிமன்றம் 27 நவம்பர் 2019 அன்றும், அறிவுசார் சொத்துரிமை வழக்கில், முக்கியமான உணவகங்கள், பப், ஐந்து நட்சத்திர விடுதிகள், கஃபெ, பார் மற்றும் ரிசார்டுகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்னாள் இரவு கொண்டாட்டங்களில் பிரபலமான திரைப்பட மற்றும் திரைப்படம் அல்லாத பாடல்களை PPL அமைப்பிடமிருந்து அனுமதி பெறாமல் ஒலிபரப்பக் கூடாது.

சம்பந்தப்பட்ட இடங்கள், ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் அமைப்பிடமிருந்து 24.12.2019க்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. PPL அமைப்பிலிருந்து அனுமதி லைசன்ஸ் பெற்ற பின்னரே பாடல்கள் ஒலிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் சொன்னதை ஹோட்டல்கள் பின்பற்றவில்லை என்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டும். பிபிஎல் வழக்கறிஞர் பேசுகையில், “காப்புரிமை மீறலைக் கட்டுப்படுத்துவதில் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அதிக அளவில் நடக்கிறது” என்றார்.

இசைக்கான உரிமம் பெற்றுள்ள PPL அமைப்பின் பெட்டிஷனுக்கு இணங்க கீழே  பட்டியலிடப்பட்டுள்ள இடங்கள் உரிமத்துக்கான தொகையைக் கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. PPL இந்தியா அமைப்பு கிட்டத்தட்ட 340 இசை நிறுவனங்களின் 30 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்ளூர் பாடல்களுக்கான, பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப / பாடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது.

சரேகமா, சூப்பர் காஸட்ஸ் (டி சீரிஸ்), சோனி மியூஸிக், யூனிவர்ஸல் மியூஸிக் உள்ளிட்ட எண்ணற்ற இசை நிறுவனங்களின் பிரதிநிதியாக PPL இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனங்கள், பிபிஎல் உடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் படி, காப்புரிமை சட்டம் 1957ன் கீழ், பொது நிகழ்ச்சிகளில் பாட ஒலிப்பதிவு, ஒலிபரப்புவதற்கான தொகையை PPL வசூல் செய்யும் பிரத்தியேக உரிமை வழங்கப்பட்டுள்ளது.

பாடல் உரிமத்துக்கான தொகை கட்டப்படவில்லை என்றால் அது காப்புரிமை மீறலாகக் கருதப்படும் என PPL   தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பிபிஎல் அமைப்புக்கும், மற்ற காப்புரிமை உரிமையாளர்களுக்கும் நிம்மதியளித்துள்ளது.

ஒவ்வொரு பயனரும் இசையை, விதிகளின் படி இசைப்பதை உறுதி செய்துள்ளது.  Play Music by the Rules. இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கும் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு தொடர்புக் கொள்ளவும் Mr.Sujesh.A.K @ 044-24341408/24341501 அல்லது or இந்த இணையத்தை நாடவும்: website-www.pplindia.org

ஹோட்டல்கள் முழு பட்டியல்

1. THE ACCORD METROPOLITON

2. THE PRIDE HOTEL

3. GREEN PARK

4. THE SPRING HOTEL

5. VGP GOLDEN BEACH RESORT

6. HABLIS HOTEL

7. RADHA REGENT

8. FORTUNE SELECT PALMS

9. HOTEL ABU SAROVAR

10. THE PROMENADE HOTELS

11. BONJOUR BONHEUR OCEAN SPRAY

12. ACCORD PUDUCHERRY

13. JENNEYS RESIDENCY

14. THE ARCADIA

15. CAG HOTELS (P) LTD

16. RAMYAS HOTELS PVT LTD

17. RATHNA RESIDENCY

18. JC RESIDENCY

19. HOTEL GERMANUS

20. POPPYS HOTEL

21. PARSONS COURT

22. CHENDURAN PARK

23. VIVERA GRANDE

24. SANGAM HOTEL MADURAI

25. SANGAM HOTEL TRICHY

26. RADISSON BLU CITY CENTRE

27. RAMADA

28. HILTON

29. FEATHERS – A RADHA HOTEL

30. ZONE BY THE PARK

31. FEMINA HOTEL

32. THANGAM GRAND

33. HERITAGE MADURAI

34. APPLETTREE

35. 10 DOWNING STREET, ARCADIA HOTEL

36. Orbis – The Passion Hotels

37. Navarathna Hotel

38. CJ Pallazzio

39. Hotel Cenneys Gateway

40. The Monarch

41. Star Residency

42. The Spk Hotel

43. Hotel RR Inn – Om Shakthy Hospitalities Private Limited

44. Lakshmi Hotel

45. Atithi TGI Grands Hotel

46. Shenbaga Hotel & Convention center

47. The Sunway Manor Hotel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img