நடிகர்கள்: புதுமுகங்கள் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ், தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ், கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா, நடன இயக்குனர் சிவசங்கர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் : தயாரிப்பு: டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை,
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்: டாக்டர் மாறன், இசை: ‘வேதம் புதிது’ தேவேந்திரன், பாடல்கள்: விஜய்சாகர், டாக்டர் கிருதயா, இயக்குநர் டாக்டர் மாறன், நடனம்: சிவசங்கர், சந்திரிக்கா, களை: நடராஜ், ஒளிப்பதிவு: பாலாஜி, படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்,
திரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டயம் பெற்றுள்ள டாக்டர் மாறன், ‘இனிய பயணம்’, ‘பொன்னான நேரம்’ என இரு குறும் படங்களை இயக்கி உள்ளார். எஸ்.ஆர்.எம் பல்கலை கழத்தில் பி.எச்.டி. (Ph.D) படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவர், இவருடைய சாலை பாதுகாப்பு ஆய்வறிக்கையின்படி பொதுமக்கள் பலன் அமையும் வகையில் “பச்சை விளக்கு” படத்தை சுவராஸ்யமாக திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் டாக்டர் மாறன் கூறும்போது, “விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை இந்தப் படம் விளக்கும். காவல்துறை குறித்து எத்தனையோ படங்கள் வெளி வந்திருந்தாலும் அதில் புதுமையான கதையுடன் இந்தப் படம் இருக்கும். காவல் துறையின் ஒரு பிரிவின் பெருமையை போற்றும் பாடமாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தின் கருத்தை இதுவரை எந்த மொழியிலும் சொல்லவில்லை.
இமான் அண்ணாச்சி தனது வழக்கமான பாணியில் மிகுந்த நகைச்சுவை கலந்து சாலை பாதுகாப்பு விதிகளை மக்கள் ரசிக்கும்படி சொல்லி நடித்திருக்கிறார். மனோபாலா காமடி வயிறு குலுங்கும்படி சிறப்பாக அமைந்துள்ளது. நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன் காமடி காட்சிகள் என்றும் பேசும்படி அமைந்து இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும். இந்தப் படத்தில் என்னுடன் ‘அம்மணி’ புகழ் மகேஷ் இன்னொரு நாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அற்புதமான வேடம். கதாநாயகி தீஷா மிக அருமையாக நடித்து அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். மற்றொரு நாயகியான தாரா தனது சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
இந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, நான் ஆகியோர் எழுதி உள்ளோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் படமாக்கி இருக்கிறேன். இந்தப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படமாக உருவாகி உள்ளது” என்று தெரிவித்தார்.