கன்னடத்தில் கடந்த வருட இறுதியில் வெளியான (டிசம்பர் 27) இந்தப் படம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது.
அமராவதி என்னும் ஒரு கற்பனை ஊரில் இக்கதை நடக்கிறது.அங்கு பல ஆண்டுகளாக உள்ள புதையல் காணாமல் போகிறது. அதனை தன் இரு மகன்களை வைத்து கண்டுபிடித்து தனது அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் இரு மகன்கள்.
காணாமல் போன புதையலைக் கண்டுபிடித்து, கொள்ளையர் சாம்ராஜ்யத்துக்கு ஹீரோ முடிவு கட்டுவதுதான் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’.
ஆபிரா எனும் கொள்ளையர் கூட்டத்தின் தலைவனான ராமராமன், ஒரு புதையலைக் கொள்ளையடிக்க நினைக்கிறான். ஆனால், ஊர் ஊராகச் சென்று நாடகம் போடும் ஒரு குழு, அவனுக்கு முன்பாகவே புதையலைக் கொள்ளையடித்துவிடுகிறது.இதனை தெரிந்து கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி வில்லன்களிடம் சிக்கிக் கொண்டு படும்பாடு தான் இக்கதை படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த மூன்று வருடமாக படத்தை எடுத்ததற்கு காரணம் படம் பார்க்கும் பொழுதே தெரிகிறது. நாயகியாக நடித்துள்ள ஷன்வி ஸ்ரீவஸ்தவா. கான்ஸ்டபிளாக நடித்துள்ள அச்யுத் குமார், ராமராமனாக நடித்துள்ள மதுசூதன் ராவ், அவருடைய வாரிசுகளாக நடித்துள்ள பாலாஜி மனோகர் மற்றும் ப்ரமோத் ஷெட்டி உள்ளிட்ட அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாகச் செய்துள்ளனர்.படத்திற்கு மிக பெரிய பலம் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு தான். இது ஒரு கவ்பாய் திரைப்படம் என்பதால் பைரேட்ஸ் ஆப் கரேபியன் படத்தை போல தோற்றம் உள்ளது. அந்த சாயல் படங்களை போல படத்தில் வரும் தீம் மியூசிக் அனைவரையும் கவர்ந்தது சண்டைப் பயிற்சி இயக்குநர் விக்ரம் மூர், மிகச் சிறந்த உழைப்பைத் தந்துள்ளார்
ஃபேண்டஸி அட்வெஞ்சர் காமெடிப் படத்தை, சுவாரசியமாகவே தந்துள்ளார் இயக்குநர் சச்சின் ரவி.