spot_img
HomeNewsகலைஞர் தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்

 தை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் மற்றும் 2வது நாள் திருவள்ளுவர் தினமான மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளும், சிறப்பு திரைப்படங்களும் உங்களை மகிழ்விக்க இருக்கிது. அதன் விவரம் வருமாறு:

ஜனவரி 15 புதன்கிழமை காலை 8:00 மணிக்கு ,சமீபத்தில் இல்லறத்தில் இணைந்த நட்சத்திர ஜோடி பங்கேற்று பொங்கலை கொண்டாடும் “தல பொங்கல்” நிகழ்ச்சியும், காலை 9:00 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் “தலைவரின் பள்ளிக்கூடம்” சிறப்பு நிகழ்ச்சியும், காலை 9:30 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘வாழ்விற்கு வழிகாட்டுவது – திரையிசை பாடல்களே, இலக்கிய பாடல்களே’ என்ற தலைப்பில் “சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும்”, காலை 11:00 மணிக்கு திரையில் கலக்கிய பிரபல நட்சத்திரக் குழந்தைகள் நமது தொலைக்காட்சி தொகுப்பாளர்களுடன் விளையாடும் கலகலப்பான “கலக்கல் குட்டீஸ்” நிகழ்ச்சியும், பகல் 12:00 மணிக்கு “நம்ம ஊரு திருவிழா” சிறப்பு நிகழ்ச்சியும், பிற்பகல் 1:30 மணிக்கு சுசீந்திரன் இயக்கத்தில் நரேன், மனோஜ் பாரதிராஜா, விஷ்வா, மிர்னாலினி நடிப்பில் திரைக்கு வந்து சில நாட்களே ஆன “சாம்பியன்” திரைப்படமும், மாலை 4:30 மணிக்கு ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதானா நடித்து கடந்து ஆண்டு வெளியாகி பாராட்டுக்களையும், பல்வேறு விருதுகளையும் குவித்த “பேரன்பு” திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜனவரி 16 வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு, சிங்கப்பூர் தீபன், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட நமது “தில்லு முல்லு” நகைச்சுவைக் குழுவினரின் சிரிப்பு பொங்கல் திருவிழாவும், காலை 9:00 மணிக்கு நடிகர் அசோக் செல்வன், வாணி போஜன், ரித்விகா, ஷா ரா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் “ஓ மை கடவுளே” திரைப்படக் குழுவினர் பங்கேற்கும் “நட்சத்திர பொங்கல்” நிகழ்ச்சியும், காலை 10:00 மணிக்கு சிவகார்த்திகேயன் பங்கேற்கும் “நம்ம வீட்டு நாயகன்” சிறப்பு நிகழ்ச்சியும், காலை 11.30 மணிக்கு பிரபல பின்னணி பாடகர்களுக்கும், கானா பாடகர்களுக்கும் இடையே நடக்கும் இசை யுத்தம் “அதிரடி கச்சேரி” என்ற சிறப்பு இசை நிகழ்ச்சியும், பிற்பகல் 1.30 மணிக்கு கிரிஷ் இயக்கத்தில் நந்தா, ஈடன் குரைக்கோஸ் நடிப்பில் புதையலை தேடிச் செல்லும் “ழகரம்” திரில்லர் திரைப்படமும் முதல் முறையாக ஒளிபரப்பப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடித்து கடந்த ஆண்டின் சிறந்த படங்களுள் ஒன்று என்ற பாராட்டுகளை பெற்ற “பக்ரீத்” திரைப்படமும், இரவு 8 மணிக்கு வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன் நடிப்பில் வெளியான வித்தியாசமான திரில்லர்  திரைப்படமான “ஜீவி” திரையிடப்படுகிறது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் உங்களை மகிழ்விக்க இருக்கின்றன. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த வகையில் அனைவர் வாழ்வும் மேன்மையுடன் சிறக்க வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img