“Kodaikanal Won’t” புகழ், சோபியா அஷ்ரப், ராப் பாடகர், மற்றும் காலா படத்தின் “நிக்கல் நிக்கல்” பாடல் எழுதிய G.லோகன் அவர்களையும் கவர்ந்த காற்று மாசுவால் நீண்ட நேரம் செயல்படும் தன்மையை இழந்த சடுகுடு மாணவர்களின் வடசென்னை சடுகுடு ஆசிரியர் வருத்தத்துடன் கூறிய கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட “காத்த வர விடு: Let Chennai Breathe” பாடல் வெளியீடு.
நாள்: ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2020
நேரம்: காலை 11.00 மணி
இடம்: ராகசுதா ஹால், 85/ 2, லூயிஸ் அவென்யூ 5வது தெரு, நாகேஸ்வரராவ் பார்க் அருகில், பாஸ்கரபுரம், மயிலாப்பூர், சென்னை.
பாடலின் இயக்குனர் ரத்தீந்திரன் R பிரசாத், “Kodaikanal Won’t” மற்றும் “சென்னை புறம்போக்கு பாடல்” ஆகியவற்றை தயாரித்துள்ளார். அவரின் முதல் திரைப்படம் “இது வேதாளம் சொல்லும் கதை” இயக்கப்பட்டு வெளியீட்டை காத்திருக்கு, மற்றும் கார்த்திக் சுப்பாராஜ்-இந் தயாரிப்பில் அடுத்த படத்திற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது.
இப்பாடலின் இசை தயாரிப்பாளரான ஆப்ரோ, தமிழ் ராப் பாடகரான அறிவுடன் சேர்ந்து மிகவும் பாராட்டப்பட்ட ஆல்பமான “தெருக்குறள்”லை உருவாக்கியுள்ளார்.
சிறப்பு விருந்தினர்கள்:
Dr. ரெக்ஸ் சர்குணம், முன்னாள் இயக்குனர், Institute of Child Health, Egmore.
Dr. ரோகினி ராவ், மருத்துவர் மற்றும் பாய்மர படகோட்டும் போட்டியில் 8 முறை தேசிய விருது பெற்ற வீராங்கனை.
சார்ள்ஸ் வினோத், கால் பந்து ஆர்வலர் மற்றும் தமிழ் திரை பட நடிகர். பா ரஞ்சித்தின் “மெட்ராஸ்” படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்தவர்.
ஏற்பாடு: எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சாரம் மற்றும் சென்னை காலநிலை மாற்ற நடவடிக்கை குழு, தூய்மையான காற்றிற்கான மருத்துவர்கள். letmebreathe.in
92, மூன்றாவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பெசன்ட் நகர், சென்னை – 600090.
மேலும் தகவல்களுக்கு: வின்சன் — 9840213445. நித்தியானந்த் ஜெயராமன் 9444082401
இது ஒரு ஜஸ்டிஸ் ராக்ஸ் தயாரிப்பு