எல்லோருடமும் இளமை மாறாத ஒரே உணர்வு காதல். தமிழ் சினிமாவில் காதல் படங்களே வராதா ஏக்கத்தை போக்க, இளமை பொங்கும் படைப்பாக, தற்கால நவீன இளைஞரகளின் வாழ்வை அழகாய் சொல்லும் படமாக வருகிறது “ஓ மை கடவுளே”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசியது…
நானும் தம்பி அசோக்கும் சிறுவயதில் இருந்தே நிறைய சேட்டைகள் செய்திருக்கிறோம். அவனுடைய கிரஷ்ஷிடம் எப்படி பேச வேண்டும் என்று கூட அவனுக்கு சொல்லி தந்துள்ளேன். என் வாழ்வில் எப்போதும் உடனிருப்பவன். அவனுடன் இந்தப்படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் எங்கள் வாழ்வில் முக்கியமான படம். அனைவருக்கும் பிடிக்ககூடிய படமாக எடுத்திருக்கிறோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி.
நிர்வாக தயாரிப்பாளர் நோவா பேசியது….
சினிமாவில் ஜெயிக்கும் அதே நேரம் மனதுக்கு பிடித்த படத்தை செய்ய வேண்டும் என நினைக்கும் டீம் நாங்கள். நண்பர்களாக இணைந்து இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள் எப்போதும் தோற்பதில்லை. இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் விது அயன்னா பேசியது….
இது என்னோட மூன்றாவது படம் “மேயாத மான், எல் கே ஜி” என ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானர். காதல் படம் என்றால் எனக்கு பிடிக்கும். இதுவும் காதல் படம் என்பதால் நான் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் மிகத்தெளிவானவராக இருந்தார். விஷுவல் நன்றாக இருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். எல் கே ஜி படத்தை ரிலீஸ் செய்த டீம் மீண்டும் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். அது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி நன்றி.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்தி பேசியது…
டில்லிபாபு சாரை முதலில் பார்த்த போது நீங்கள் தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். பிஸுனஸ் விஷயம் எல்லாம் அப்புறம் பார்த்துகொள்ளலாம் என்றார். படம் அருமையாகவே இருந்தது. கடைசியாக சில்லுகருப்பட்டி ரிலீஸ் செய்தேன். அதே மனதுடன் நேர்மறை தன்மையுடன் இந்தப்படத்தையும் ரிலீஸ் செய்கிறேன். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் ஒரு டீமாக எந்த ஈகோவும் இல்லாமல் வேலை செய்துள்ளார்கள். சந்தோஷமான மனதுடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறேன் நன்றி.
நடிகர் சாரா பேசியது…
இது கிட்டதட்ட என்னோட ரூம்மேட்கள் சேர்ந்து எடுத்த படம். எல்லோரும் சேர்ந்து வ%