No menu items!
More
    spot_img
    HomeNewsஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் "மாயத்திரை" படத்தின் படபிடிப்பு தொடங்கியது !

    ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் படபிடிப்பு தொடங்கியது !

    பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக டூலெட், திரௌபதி  படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் மற்றும் பாண்டி முனி படத்தில் நடித்து வரும் மேகாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த S .N அருணகிரி இசைமைக்கிறார் .

    இயக்குனர்கள் பாலா, எழில் ,அகத்தியன் ஆகியோரிடம்  உதவி இயக்குனராய் பணி புரிந்த சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார்

    15 வருடங்களுக்கு முன்பு தாலி புதுசு என்று குஷ்புவை வைத்து படம் தயாரித்த V .சாய் பாபு “மாயத்திரை” படத்தை தயாரிக்கிறார் .

    சிறுதெய்வ வழிபாடு, குலதெய்வம் பற்றிய முக்கியமான அம்சங்களை கொண்ட “மாயத்திரை” படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது .

    தொழில்நுட்பக்குழு :

    இயக்கம் – தி.சம்பத் குமார்
    தயாரிப்பு – V.சாய் பாபு
    இசை – S .N அருணகிரி
    ஒளிப்பதிவு -இளையராஜா
    கலை இயக்கம்  – பத்மஸ்ரீ தோட்டா தரணி
    நடனம் – ராதிகா
    சண்டைப்பயிற்சி – பிரதீப் தினேஷ்
    சவுண்ட் என்ஜினியர் – அசோக்
    மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Must Read

    spot_img