இது குறித்து நடிகர் அருண் விஜய் பகிர்ந்து கொண்டதாவது…
கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய நட்சத்திரங்களை கண்மூடித்தனமாக கொண்டாடுவதில்லை. அவர்கள் தரமான படங்களையே கொண்டாடுவார்கள். நல்ல படங்களுக்கு பெரும் வரவேற்பு தருவார்கள். நான் அவர்களை சந்தித்தபோது அவர்கள் காட்டிய அன்பில், உணர்வுகளின் குவியலில் சிக்கி மனம் நெகிழ்ந்து போனேன். அவர்கள் தந்த வரவேற்பும், அன்பும் மறக்க முடியாதது. பலர் தனித்தனியாக வந்து படத்தின் தொழில்நுட்ப அம்சங்களை தனித்தனியே குறிப்பிட்டு பேசியது பெரும் ஆச்சர்யமாக இருந்தது. தயாரிப்பு தரப்பான Lyca Productions மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு பெரும் நன்றிகள். என் தந்தை என்னிடம் அடிக்கடி “உண்மையான வெற்றி என்பது தியேட்டர் உரிமையார்களின் முகத்தில் வழியும் புன்னகையில் இருக்கிறது” என்பார். அதை
நேரில் கண்டபோது உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியது. முன் திரையிடல் காட்சிகள், விமர்சனங்கள், ரசிகர்களின் கொண்டாடங்களுக்கு பிறகு கோயம்புத்தூர் முதலாக அனைத்து இடங்களிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்திய செய்திகள் மேலும் மகிழ்ச்சியை கூட்டியுள்ளது என்றார்.
ரசிகர்களின் பேராதரவில் பெரும் கொண்டாட்டத்தில் “மாஃபியா” பெரு வெற்றி பெற்றிருக்க, பலரும் “மாஃபியா 2” எப்போது என பெரும் ஆர்வத்துடன் வினவி வருகிறார்கள். இதே அளவு ஆச்சர்யங்களுடன் பெரு வெற்றிப்படமாக “மாஃபியா 2” வருமென அருண் விஜய்யும் அதே உற்சாகத்தில் அறிவிப்பிற்காக காத்திருக்கிறார்.