spot_img
HomeNewsஇயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'. ...

இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. —————————— இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். கண்ணன் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம். இப்படத்தில் சந்தானத்திற்கு மூன்று வேடங்கள் இருக்கிறது. அதில் ஒன்று ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் போல வேடம் அணிந்து இருப்பார். அந்த வேடத்தில் அந்த கால பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனை தளம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. இசையமைப்பாளர் ரதன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவர். நாம் எதிர்பார்ப்பதை அப்படியே கொடுக்கும் திறமைசாலி. ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடிக்க, ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். எழுத்து இயக்கம் – ஆர்.கண்ணன் இசை – ரதன் ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம் படத்தொகுப்பு – ஆர்.கே.செல்வா கலை – ராஜ்குமார் சண்டை பயிற்சி – ஹரி நடனம் – சதீஷ் மக்கள் தொடர்பு – ஜான்சன் தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர் தயாரிப்பு – ஆர்.கண்ணன்.

இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’.
——————————
இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.

கண்ணன் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை.

இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம்.

இப்படத்தில் சந்தானத்திற்கு மூன்று வேடங்கள் இருக்கிறது. அதில் ஒன்று ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் போல வேடம் அணிந்து இருப்பார். அந்த வேடத்தில் அந்த கால பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனை தளம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.

இசையமைப்பாளர் ரதன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவர். நாம் எதிர்பார்ப்பதை அப்படியே கொடுக்கும் திறமைசாலி. ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடிக்க, ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

எழுத்து இயக்கம் – ஆர்.கண்ணன்
இசை – ரதன்
ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம்
படத்தொகுப்பு – ஆர்.கே.செல்வா
கலை – ராஜ்குமார்
சண்டை பயிற்சி – ஹரி
நடனம் – சதீஷ்
மக்கள் தொடர்பு – ஜான்சன்
தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்
தயாரிப்பு – ஆர்.கண்ணன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img