இயக்குநர் கார்த்திக் ராஜு இதுகுறித்து கூறியதாவது ….
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மொத்த படக்குழுவிற்கும் பெரும் மகிழ்ச்சி. இது அவரது பெருந்தனமையே ஆகும்.
படத்தின் தலைப்பு “சூர்ப்பனகை” என்பதிலேயே இப்படம் கனமான கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டது என்பது விளங்கும். “சூர்ப்பனகை” எனும் பெயர் படத்தில் என்ன வகையான பாதிப்பை தரும், ரெஜினா கஸண்ட்ராவின் கதாப்பாத்திரம் என்ன மாதிரி இருக்கும் என பெரும் ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டியிருக்கும். அதுவும் ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள ரெஜினா கஸண்ட்ராவின் தோற்றம் மேலும் பல கேள்விகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவை அனைத்தும் இப்போதைக்கு மர்மமே. இது குறித்து தற்போது ஏதும் சொல்ல முடியாது. ரசிகர்கள் அதனை திரையில் காணட்டும் அப்போது தான் அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும். சூர்ப்பனகை ஒரு மர்ம வகை திரில்லர் திரைப்படம். சாகசம், ஹியுமர், திரில்லர் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும். ரசிகர்களை புது வகை திரில் அனுபவத்திற்கு அழைத்து செல்வதாக இப்படம் இருக்கும் என்றார்.
Apple Tree Studios சார்பில் ராஜசேகர் வர்மா இப்படத்தை தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கி, குற்றாலம் முதலான நேரடி இடங்களில் தீவிரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.