spot_img
HomeCinema Reviewதாராளப் பிரபு விமர்சனம்

தாராளப் பிரபு விமர்சனம்

உலகம் பிறந்தது இதுநாள் வரை பல தானங்களை நாம் செய்திருக்கிறோம் பெற்றிருக்கிறோம் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்  ஆனால் இன்று ரத்த தானம் உறுப்பு தானம் என்று பலதரப்பட்ட தானங்கள் கிடைக்கின்றனஆனால் தாராள பிரபு படத்தில் இயக்குனர் எடுத்திருக்கும் தானம் விந்து தானம் ஆம் குழந்தையின்மைக்கு வாடகை தாய் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம் இது குழந்தையை சுமக்க  முடியாத தாய்தன் கணவனை விந்தணுவை எடுத்து வாடகைத்தாய் மூலம்  கருவை சுமந்து பெற்றெடுக்கும் முறை ஆனால் கணவனுக்கு விந்துவில் உயிரணுக்கள் இல்லை என்றால் என்ன செய்வது அதற்கு தான் விந்துவை தானமாகப் பெறுவது

‘தனுசு ராசி நேயர்களே’ என ஜாலி காதல் படங்கள் நடித்துக் கொண்டிருந்த ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்த    படம் தாராளப் பிரபு

செயற்கை கருத்தரிப்பு மையம் வைத்து நடத்தும் மருத்துவர் விவேக். தனது மருத்துவமனைக்கு ஆரோக்கியமான ஒரு உயிரணு டோனரை தேடிக்கொண்டிருக்கிறார்.

கல்யாண் விளையாட்டு வீரராக இருக்கிறார். ஸ்போர்ட் கோட்டாவில் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி தன்யாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். காதலை சொல்லி இருவரும் காதலித்து வருகிறார்கள்.

விவேக். கண்களில் சிக்குகிறார் ஹரிஷ் கல்யாண் அவரிடம் சம்மதிக்க வைத்து டோனராக்குகிறார்.

இதற்கிடையில் தான்யா ஹோப்  ஹரிஷ் கல்யாண்   இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்பதை தெரிந்து கொள்கிறார்  ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிகிறார்கள்.

ஹரிஷ் கல்யாண்  நடிப்பிலும் முந்தைய படங்களை காட்டிலும் இதில் அதிக பக்குவ நிலை தெரிகிறது. தான் யார் என்பதை சொல்ல முடியாமல் தவிப்பதும்’ காதல் மனைவி கண்டு உருகுவதும், அம்மா பாட்டியிடம் செல்லம் கொஞ்சுவதுமாக நடிப்பில் பண்பட்ட நிலை தெரிகிறது. உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்  காமெடியும் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.   நாயகி தன்யா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவாக நடித்து கவனிக்க வைத்திருக்கிறார்.காதல் வெட்கம் ரொமான்ஸ் ஆனால் பிற்பாதியில் குழந்தை இல்லாமல் வாடுவது தன் கணவர் யார் என தெரிந்து உடைந்து நொறுங்குவதுமாக நடிப்பில் அத்தனை சிறப்பு    வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்

படத்தைப் பொருத்தவரை மிகப்பெரும் பலம் விவேக் தான் பல காட்சிகளை மிகவும் எளிதாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.எடுத்துக் கொண்ட பாத்திரம் என்ன என்பதை மட்டும் சொன்னால் போதும் என்பதை புரிந்துகொண்டு காமெடி வசனங்களிலும் அற்புதமாகவே செயல்பட்டிருக்கிறார்.

கதை இந்திப் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் அதை தமிழுக்கு ஏற்றார்போல் அழகாக எந்த ஒரு ஆபாசம் இல்லாமல் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் மக்கள் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார் இயக்குனர்

 

தாராள பிரபு      வசூல் பிரபு

Must Read

spot_img