இலவச அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை… ‘கொரோனா’ ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தமிழ் விஸ்வகர்மா சமுதாய சேவா சங்கம் வழங்கிய நிவாரணம்!
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது ‘தமிழ் விஸ்வகர்மா சமுதாய சேவா சங்கம்’ என்ற அமைப்பு.
அந்த அமைப்பின் ஏற்பாட்டில், கொரோனா வைரஸ் பரவலையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாததால் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிற ஏழை எளிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 5.4.2020 அன்று காலை நடைபெற்றது.
சென்னை நெற்குன்றத்தில் அமைந்துள்ள மேற்குறிப்பிட்ட அமைப்பின் அலுவலக வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் நிர்வாகிகள் முத்தையா முருகன், பி.என். செந்தில்குமார் உட்பட சங்க நிர்வாகிகளின் முன்னிலையில் பா.ஜ.க.வின் தென்சென்னை மாவட்டத் தலைவர் வி.கே. வெங்கடேஷ் நிவாரணப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பொருட்களைப் பெற்றுகொள்ள வந்தவர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் முகக்கவசம் அணிந்திருந்ததோடு அரசு அறிவித்துள்ளபடி முறையான சமூக இடைவெளியைக் கடைப்பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.