spot_img
HomeNewsஜாஸ்மின் இயக்குனரின் அடுத்த படம்

ஜாஸ்மின் இயக்குனரின் அடுத்த படம்

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகன் சாய் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் சார்பாக இப்படத்தின்  தயாரிப்பாளரும் அவரே.

தமிழ்ப் புத்தாண்டான  இன்று இப்படத்தின் பூஜை மிக எளிமையான முறையில் ஜெகன்சாய் வீட்டிலே நடைபெற்றது.
எல்லாத்தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளக்  கூடிய வகையில் ஜெகன்சாய் உருவாக்கியுள்ள இப்படத்தின் கதையில் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முன்னணி டெக்னிஷியன்ஸ் பணியாற்ற இருக்கிறார்கள் அதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது.

ஜெகன்சாய்  ஏற்கனவே ‘ஜாஸ்மின்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். அப்படம் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கு நாட்கள் முடிந்த பின் வெளியாகும்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையை இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆன ஜெகன் சாய் மிகப்பிரம்மாண்டமாக நடத்த நினைத்தார். கொரோனா காரணமாக மிக எளிமையான முறையில் அவரது வீட்டில் நடைபெற்றது. அதைப்பற்றி இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெகன் சாய் கூறுகையில்,  “எளிமையில் எண்ணற்ற வலிமை இருக்கிறது என்பார்கள். அந்த வலிமை மக்களை கொரோனாவில் இருந்தும் மீட்டெடுக்கும்  தமிழ்சினிமாவும் விட்டதை எல்லாம் வென்றெடுக்கும்” என்று நம்பிக்கையோடு தெரிவித்து படக்குழு சார்பாக அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும் கூறினார்.

Must Read

spot_img