HomeNewsகொரோனா-பேரிடர் கால பெருங்கதைகள்’

கொரோனா-பேரிடர் கால பெருங்கதைகள்’

கொரோனா-பேரிடர் கால பெருங்கதைகள்’

கொரோனா உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. மக்களும், அனைத்துலக அரசாங்களும் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள போராடிக்   கொண்டிருக்கின்றனர்.

இச்சூழலில் கொரோனா பற்றிய தெளிவான பதிவுகளை நிகழ்ச்சிகளாக வழங்கி வருகிறது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி. கொரோனா நோயினால் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை ‘கொரோனா-பேரிடர் கால பெருங்கதைகள்’ எனும் நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து தெரியபடுத்தி வருகிறது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.

ஓமந்தூரார் வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற நோக்கத்திற்காக கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், பின்னாளில் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டது. சட்டமன்றத்திற்காக கட்டப்பட்ட கட்டிடம் எப்படி மருத்துவமனையாகவும் செயல்படுகிறது என்பதை ‘இரண்டு முதலமைச்சரும் ஒரு பிரதமரும் நான்கு கட்டிடங்களும்’ எனும் தலைப்பில் விரிவான தகவல்களாக வழங்கியிருப்பது சிறப்பு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக திகழும் கலைஞர் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை இந்நிகழ்ச்சியின் மூலம் தெளிவாகும்!

கொரோனா காலத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் உலக பணக்காரர்கள் எவ்வளவு நிதி வழங்கினார்கள் என்பதை ஆராய்ந்து சிறப்பான தொகுப்பாக வழங்கியுள்ளது ’எந்த முதலாளி எவ்வளவு கொடுத்தார்’ நிகழ்ச்சி.

கொரோனா நோயின் தாக்கம் இவ்வளவு அதிகரித்திற்பதற்கு சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு வருவதும் காரணமென சூழலியலாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் சூழலையும் கொரோனா நோயையும் ஒப்பிட்டு ’மீண்டும் அலட்சியம் வேண்டாம்’ எனும் நிகழ்ச்சியின் மூலம் இயற்கையின் அவசியத்தை மக்கள் விரும்பும் பார்வையில் வழங்கியுள்ளது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி.

கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு பயன் தரும் வகையில் இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சி தொகுப்புகளை 24 மணி நேரமும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் காணலாம். கொரோனாவில் இருந்தும், வருங்காலத்தில் இதுபோன்ற இன்னல்கள் வராமல் இருக்கவும் தற்காத்து கொள்ளலாம்.

 

Must Read

spot_img