வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் NTSE தேர்வில் மாபெரும் சாதனை!

691

நாள்: 06.05.2020

வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் NTSE தேர்வில் மாபெரும் சாதனை!

2019ஆம் ஆண்டுக்கான NTSE தேர்வில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி செல்வி டி.எஸ்.திவ்யபாரதி, (பொதுப் பிரிவில்) தமிழகத்திலேயே 2வது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் ஐந்து மாணவர்கள் 4, 5, 6, 7 மற்றும் 11வது இடத்தைப் பெற்று, தமிழகத்தின் டாப் 10 வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், சென்னை மாவட்ட அளவில் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்மத்தில் பயிலும் அறுபது மாணவர்கள் முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த NTSE தேர்வுக்குத் தகுதியாகும் மாணவ மாணவியருக்கு இரண்டு கட்டத் தேர்வுகள் நடத்தப்படும். முதல் கட்டத் தேர்வு மாநிலம் அளவிலும், இரண்டாம் கட்டத் தேர்வு தேசிய அளவிலும் நடத்தப்படும். முதல் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், NCERT நடத்தும் தேசிய அளவிலான NTSE தேர்வில் இரண்டாம் கட்டத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழக அளவில் இப்பெரும் சாதனையை நிகழ்த்திய மாணவ, மாணவியர்களையும், அவர்கள் திறமையை வெளிப்படுத்த உதவிய ஆசிரியர்களையும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்ம நிர்வாகம் பாராட்டி வாழ்த்துகிறது.